அபுஜா : நைஜீரியாவில் 10 மீனவர்களின் கழுத்தை அறுத்து போகோ ஹராம் தீவிரவாதிகள் படுகொலை செய்த சம்பவம் உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மூன்று கடற்கரை கிராமங்களில் புகுந்த போகோ ஹராம் தீவிரவாதிகள், அங்கிருந்த 10 மீனவர்களை பிடித்து அவர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.
இந்த தகவல் உள்ளூர் மீனவர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Boko Haram இதுகுறித்து அதிர்ச்சிய கலந்த மனநிலையில் பேசிய மீனவர் ஒருவர், போகோ ஹராம் தீவிரவாதிகள் நேற்று மாலை 4 மணி அளவில் மூன்று கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அவர்கள் மீனவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
இந்த தாக்குதலில் அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. எனவே இத்தாக்குதல் குறித்து ராணுவ வீரர்களுக்கு எந்தவித தகவலும் தெரியவில்லை என்றார்.
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அப்பாவி கிராம மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நைஜீரிய சர்வதேச படை என மொத்தம் 8,700 வீரர்கள் களம் இறங்கியும் போகோஹாரம் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நைஜீரிய அரசு திணறி வருகிறது.
இதனால் போகோஹாரம் தீவிரவாதிகளின் கொடூரச் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.