சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போலவே, தான் அர்ப்பணித்த பணியில் ஈடுபட்டிருந்தபட்டிருந்தபோதே காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்துள்ளார்.

8e5e0c6d-3c0e-4c49-b62e-dமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அப்துல்கலாம் தன்னை ஒரு ஆசிரியர் என்று கூறிக்கொள்வதில்தான் பெருமையடைவதாக கூறியிருந்தார்.

முன்னாள் குடியரசு தலைவர் என்ற அடைமொழியைவிட ஆசிரியர் என்பதிலேயே அலாதி இன்பம் பெற்றார் கலாம்.

அப்படி கலாம் நேசித்து வாழ்க்கையை ஆசிரிய பணிக்காகவே அர்ப்பணித்ததால்தான், நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தி்த்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.

அப்படி ஷில்லாங்கில் உரையாடியபோதுதான் நொடிப் பொழுதில் கலாம் மரணத்தை தழுவினார்.

31-1438344604-sasi-perumal34காந்தியவாதியான சசிபெருமாளும் தனது வாழ்நாளை மது ஒழிப்புக்காக அர்ப்பணித்திருந்தார்.

இன்று மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதுதான், யாரும் எதிர்பாராதவகையில் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.

சமூக மாற்றத்திற்காக உழைத்த இரு பெரும் தலைவர்களுமே, தாங்கள் அர்ப்பணித்த பணியின்போதே மரணமடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply