வெள்ளி, தங்கம், நவரத்தினங்கள் போன்றவை வெறும் ஆடம்பரம், பகட்டை வெளிப்படுத்துவது இல்லை.
ஒவ்வொரு ஆபரணமும், அதில் பதிக்கப்படும் கற்களும் மனிதர்களுக்கு உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறதாம்.
உதாரணமாக கூற வேண்டுமானால், தங்கம் உங்களது உடல் வலியை குறைக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மேம்படுத்தும் தன்மை கொண்டது.
நவரத்தின கற்கள் ஒவ்வொன்றுக்கும், மனதையும், உடலையும் இலகுவாக்கும் தன்மை உள்ளதாம். ஆனால், இது கால போக்கில் உண்மை கரைந்து, போலி ஊடுருவி மக்களை மோசடி செய்யும் வியாபாரமாக மாறியிருக்கிறது….
இனி, நகை மற்றும் நவரத்தினம் அணிவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள் குறித்து பார்க்கலாம்…

வெள்ளி நகைகள்
வெள்ளி நகைகள் அணிவதால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறதாம். மற்றும் இரத்தநாளங்கள், எலும்பின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், உடல் வலியில் இருந்து நிவர்த்தியடைய செய்கிறது.
31-1438340539-1healthbenefitsofjewelleryandgemstones
செப்பு காப்புகள்
செப்பு காப்புகள், மூட்டு வலிகளை குறைக்கிறது. எலும்பு சார்ந்த வலி இருப்பவர்கள் செப்பு காப்பு அணிந்து வந்தால் நல்ல தீர்வு காணலாம்.

31-1438340547-2healthbenefitsofjewelleryandgemstones

தங்கம்
தங்க நகை அணிவதால் வாழ்நாள் கூடும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே நிலவி வருகிறது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் தன்மை தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பதட்டத்தை குறைத்து, மன தைரியத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
31-1438340553-3healthbenefitsofjewelleryandgemstones
முத்து
முத்து, செரிமானம், இதயம் மற்றும் கருவுறுதல் போன்ற கோளாறுகளிலிருந்து நிவர்த்தியடைய உதவுகிறது. மற்றும் உங்கள் கோவத்தை குறைக்கவும், உணர்சிகளை கட்டுப்படுத்தவும் கூட முத்து உதவும். முத்துமாலை அணிவதால் இந்த நன்மைகளை எல்லாம் கிடைக்க பெறலாம்
31-1438340559-4healthbenefitsofjewelleryandgemstones
கார்னட்டின் – Garnet
நவரத்தின கற்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும் என நமது மூதாதையர் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. இது, தீய எண்ணங்களை அழிக்கவும், நன்மையை அதிகரிக்கவும் செய்யும் என்று நம்பப்படுகிறது. கார்னட்டின் கற்கள் சக்தியை அதிகரிக்க தூண்டி தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்று கூறுகிறார்கள்.

31-1438340565-5healthbenefitsofjewelleryandgemstones

அம்பர் – Amber
பண்டைய காலத்திலிருந்தே அம்பர், கழுத்து, தலை, மற்றும் தொண்டை வலிகளுக்கான நிவாரணியாக பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. அம்பரில் நெக்லஸ் அணிவது பதட்டம், மயக்கம் போன்றவற்றையும் குறைக்க உதவுமாம். Show Thumbnail

31-1438340571-6healthbenefitsofjewelleryandgemstones

செவ்வந்தி கல் – Amethyst
செவ்வந்தி கல் என கூறப்படும் “Amethyst” உங்கள் மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள உதவுமாம். மன நிம்மதி இல்லாதவர்கள் இதை அணியலாம்.
31-1438340578-7healthbenefitsofjewelleryandgemstones

இந்திரநீல கல் – Aquamarine
 
இந்திரநீல கல், செரிமானம், கண் மற்றும் பற்களின் வலிமையை சீராக வைத்துக்கொள்ள உதவுமாம். இது எதிர்மறை எண்ணங்களை குறைத்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது. துயரத்தை துடைத்து, இன்பம் பெருக வைக்குமாம் இந்திரநீல கல்.31-1438340584-8healthbenefitsofjewelleryandgemstones

Share.
Leave A Reply