மதவாச்சி, பூணாவ பகுதியில் இன்று (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கன்டர் ரக வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply