புறக்­கோட்டை தனியார் பஸ் நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பெட்­டிக்குள் இருந்த சட­லமும் சம்­ப­வத்தின் பின்­ன­ணியும்.

அது கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை. வழ­மையான பர­ப­ரப்­புடன் இயங்­கிக்­கொண்­டி­ருந்­தது புறக்­கோட்டை. நாட்டின் நாலா புறமும் இருந்து வந்­த­வர்­களும் நாலா புறத்தை நோக்கி செல்லத் தயா­ரா­னோரும் புறக்கோட்­டையின், பெஸ்­டியன் மாவத்­தையில் உள்ள தனியார் பஸ் நிலை­யத்தில் பர­ப­ரப்­பாக அலைந்து திரிந்த முற்பகல் வேளை அது.

சுறு­சு­றுப்­புக்கு கொஞ்­சமும் பஞ்­ச­மில்­லாது இயங்­கிக்­கொண்­டி­ருந்த கொழும்பு மத்­திய பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு இதன் போது தான் வந்து இறங்­கு­கின்றார் மொஹிதீன். அனு­ராதபுரத்தைச் சேர்ந்த எம்.எம்.சி. மொஹிதீன் கடந்த இரு வரு­டங்­க­ளாக சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் சார­தி­யாக வேலை பார்த்­து­விட்டு தனது மனைவி சகிதம் கட்­டு­நா­யக்­கவில் இருந்து கொழும்­புக்கு அவர் அப்­போது தான் தனது ஊருக்கு செல்லும் நோக்­கோடு வந்­துள்ளார்.

மனை­வியின் கைகளில் இரு பொதிகள். மொஹி­தீனின் கைகளில் பெரிய பெட்­டி­யொன்றும் இன்­னொரு பொதியும் இருந்­துள்­ளது.

இதன் போது மொஹிதீன் அவ­ரது பொதி­களை தூக்கி வரு­வதில் சிர­மங்கள் இருக்­கவே சுமார் 48 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் அவ­ருக்கு அதனை சுமந்து செல்ல உத­வி­யுள்ளார்.

குறித்த உதவி செய்த நபர் தானும் தம்­புள்­ளைக்கு செல்ல வேண்டும் என தெரி­வித்து சுமு­க­மா­கவே உரை­யாடி 15 ஆம் இலக்க பஸ் தரித்து நிற்கும் இடத்தை நோக்கி சென்­றுள்­ளனர்.

சுமை ­கா­ர­ண­மாக பொதியை பிடித்­தி­ருந்த கையை எடுத்து மறு­கைக்கு மாற்ற மொஹிதீன் முனைந்த போது குறித்த நபர் அப்­பொ­தி­யுடன் அங்­கி­ருந்து பிறி­தொரு பஸ் வண்­டிக்குள் ஏறி மறைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து தனது பயணப் பொதியைத் தேடி மொஹிதீன் பஸ் தரிப்பு நிலையம் எங்கும் அலைந்­துள்ளார்.

இதன் போது அங்­கி­ருந்த நடை­பாதை வியா­பா­ரி­க­ளையும் அவர் வின­வி­யுள்ள நிலையில் அவர்­களும் அது தொடர்பில் தேடி­யுள்­ளனர்.

இதன்­போது 15 ஆம் இலக்க பாதையில் பய­ணிக்கும் கொழும்பு–- அனு­ராதபுரம் பஸ் வண்டி தரிக்கும் இடத்தில் பிர­யா­ணிகள் வரி­சை­யாக இருக்க அங்கு கைவி­டப்­பட்ட கறுப்பு நிற பயணப் பொதி­யொன்று இருந்­துள்­ளது.

மொஹி­தீனின் பயணப் பொதியைத் தேடியோர் அதுவா பொதி என கேட்ட போதும் மொஹிதீன் அது தனது பொதி­யல்ல என தெரி­வித்­துள்ளார்.

அங்­கி­ருந்த அந்த கறுப்பு நிறத்­தி­னா­லான அந்த பெட்டி 3 அடி நீளமும் 2 அடி அக­லமும் 1 அடி உய­ரமும் கொண்­டது.அந்த பெட்­டி­யா­னது 15 ஆம் இலக்க கொழும்பு-–அனு­ரா­த­புரம் தனியார் அரை சொகுசு மற்றும் சாதா­ரண கட்­டணம் அற­விடும் 31 ஆம் இலக்க தரிப்­பி­டத்­தி­லேயே கைவி­டப்­பட்ட நிலையில் இருந்­துள்­ளது.

அந்த இடத்தில் கொழும்பு–அனு­ராதபுரம் பஸ் வண்­டி­க­ளுக்கு மேல­தி­க­மாக கொழும்­பி­லி­ருந்து, ஸ்ரீ புற, கஹட்­ட­கஸ்­தி­கி­லிய, ஹொரவ­பொத்­தானை, கல்­னேவ மற்றும் வேவல ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு செல்லும் பஸ் வண்­டி­களும் நிறுத்­தப்­ப­டு­வது குறித்த அடை­யா­ளப்­ப­டுத்­தல்­களும் இருந்­தன.

இந் நிலையில் யாரும் உரி­மை­ கோ­ராத அந்த பெட்­டியை அங்­கி­ருந்த தண்ணீர் போத்­தல்கள் விற்­பனை செய்யும் வியா­பாரி ஒருவர் திறந்­துள்ளார்.

இதன் போது நீல நிற துணி­யொன்­றினால் சுற்­றப்­பட்டு மடிக்­கப்­பட்ட நிலையில் சடலம் ஒன்று அந்த பெட்­டிக்குள் இருப்­பதை அவர் கண்டு அதிர்ச்­சி­யுடன் கத்­தவே, விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்­றுள்­ளது.

வழ­மை­யான நட­வ­டிக்­கை­களில் புறக்கோட்டை பொலி­ஸாரும் ஈடு­பட்­டி­ருந்த போது தன் 119 ஊடாக வந்த ஒரு அழைப்பு புறக் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­ட­வர்­களை புறக்கோட்டை பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்தில் கொண்­டு­வந்து நிறுத்­தி­யது.

‘சேர், நான் நடை­பாதை வியா­பாரி செல்­லையா வீரப்பன் கதைக்­கின்றேன். அனு­ராதபுரம் தனியார் பஸ் தரிப்­பி­டத்தில் ஒரு பெட்­டிக்குள் சடலம் ஒன்று உள்­ளது சேர்…’ என கூறி அந்த தொலை­பேசி இலக்கம் துண்­டிக்­கப்­பட்­டது.

புறக் கோட்டை பொலி­ஸா­ரினால் உட­ன­டி­யா­கவே விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

காலை 9.15 மணி­ய­ளவில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் பொலிஸார் பல்­வேறு தக­வல்­க­ளையும் சேக­ரித்து பலரின் வாக்கு மூலங்­க­ளையும் பதிவு செய்­து­கொண்­டனர். இந் நிலையில் சடலம் இருந்த பெட்டி அந்த இடத்­தி­லேயே அப்­ப­டியே வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், விசா­ர­ணைகள் தொடர்ந்­தன.

புதன் பிற்­பகல் வேளையில் புதுக்­கடை 9 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி திலின கமகே ஸ்தலம் விரைந்து மஜிஸ்­திரேட் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.

இதன் போது பெட்­டிக்குள் இருக்கும் சடலம் பெண்­ணொ­ரு­வ­ரு­டை­யது என உறு­தி­யான நிலையில் அவ­ரது உயரம் 5 அடி 2 அங்­குலம் என தெரி­ய­வந்­தது. உடலில் எங்கும் எவ்­வித வெளிக் காயங்­களும் இல்­லாமல் அந்த சடலம் காணப்­பட்­டது. மூக்கில் மட்டும் இரத்தம் வெளி­யே­றி­ய­மைக்­கான அடை­யா­ளங்கள் இருந்­தன.

சட­ல­மா­னது அரை நிர்­வா­ண­மாக இருந்­தது. சட­லத்தின் மேற்­ப­குதி இளம் நீலம் மற்றும் வெள்ளை கலந்த டீ சேட் ஒன்று அணி­யப்­பட்ட நிலையில் இருந்­தது. அந்த டீ சேட்­டிலும் இரத்தக் கறைகள் இருந்­தன.

இதனை விட கீழ் பகு­தியில் உள்­ளாடை மட்­டுமே காணப்­பட்­டது. இதனை விட அந்த பெட்­டியில் சட­ல­மாக காணப்­பட்ட பெண்ணின் உள்­ளா­டைகள், மேலா­டைகள், போர்வை என பல துணிமணி­களும் இருந்­தன. எனினும் அவரை அடை­யாளம் காணும் வகையில் எதுவும் இருக்­க­வில்லை.

சட­லத்தின் கழுத்தில் ஓம் அடை­யாளம் இடப்­பட்ட பென்­ட­னுடன் கூடிய தங்கச் சங்கிலி ஒன்றும் காலில் சலங்­கை­களும் காணப்­பட்­டன. காதில் கம்­மல்கள் இருக்­க­வில்லை. இதனை விட சட­லத்தின் நெற்­றியில் பொட்டு ஒன்றும் இருந்­தது.

இந் நிலையில் சட­ல­மாக உள்ள பெண் யார் என்ற கேள்­வியும் அவர் எவ்­வாறு மர­ண­ம­டைந்தார் என்ற கேள்­வியும் ஏற்­பட்­டது. இந் நிலை­யி­லேயே ஊட­கங்­க­ளுக்கு குறித்த பெண்னின் படங்­களைக் கொடுத்த பொலிஸார் அடை­யாளம் காண உதவி கோரினர்.

அதே கையோடு விசா­ர­ணை­க­ளையும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தினர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.இதன் போது நேற்று முன் தினம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு விசேட தகவல் ஒன்று கிடைத்­தது.

‘சேர்.. நான் XXX லொட்ஜின் முகா­மை­யாளர் பேசு­கின்றேன். பத்­தி­ரி­கையில் உள்ள சட­ல­மாக இருந்த அந்த பெண் எங்கள் லொட்ஜில் தான் தங்­கி­யி­ருந்தார்’ என தகவல் கொடுத்­தது.

உடன் செயற்­பட்ட பொலிஸார் கொழும்பு, செட்­டியார் தெருவில் உள்ள குறித்த லொட்­ஜுக்கு சென்று அங்­கி­ருந்த சீ.சீ.டீ.வி.கண்­காணிப்பு கம­ராவில் உள்ள பதி­வு­களை அவ­தா­னித்­தனர்.

அதனைத் தொடர்ந்து லொட்ஜில் இருந்த பதி­வு­களின் படி அவர் யாழ். வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்­தவர் என்­பதைக் கண்­ட­றிந்து யாழ். பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்கி உற­வி­னர்­களை கண்­ட­றிந்து விசா­ரித்து தக­வல்­களைப் பெற்­றனர்.

புறக்­கோட்டை பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலை யத்தில் பிர­யாணப் பெட்­டிக்குள் மறைத்து கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்­டுக்­கோட்­டையைச் சேர்ந்த 34 வய­து­டைய ரங்கன் கார்த்­தி­கா­வி­னு­டை­யது என அடை­யாளம் காணப்­பட்­டது.

இர­வோ­டிர­வாக யாழில் இருந்து கொழும்­புக்கு வந்த கார்த்­தி­காவின் தாயார் சட­லத்தை அடை­யாளம் காட்­டினார்.

இந் நிலையில் பல்­வேறு தக­வல்­களைப் பெற்ற பொலிஸார் கொலைக் கான காரணம் முறை தவ­றிய காதல் என கண்­ட­றிந்­தனர். சந்­தேக நப­ரையும் அடை­யாளம் கண்டு யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்த அவரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் கடந்த 3 வரு­டங்­க­ளாக கொழும்­பி­லேயே வசித்து வந்­துள்­ள­தா­கவும் இறு­தி­யாக அவர் ஒன்­பது நாட்­க­ளுக்கு முன்னர் கொழும்பு செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தனியார் தங்கும் விடு­திக்கு பிறி­தொரு ஆணுடன் வந்து தங்­கி­யி­ருந்­துள்­ள­தா­கவும்,விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

செட்­டியார் தெருவில் உள்ள குறித்த தங்குமி­டத்தில் வைத்தே கார்த்­திகா கொலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், 3 அடி நீளம்,2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உய­ர­மான கறுப்பு நிற பெட்­டி­யொன்றை சிர­மத்­துக்கு மத்­தியில் சந்­தேக நபர் சுமந்­து­கொண்டு விடு­தியில் இருந்து வெளி­யேறும் சீ.சீ.ரி.வி. காட்­சி­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

மேல் மாடியில் இருந்து மிகவும் சிர­மத்­துக்கு மத்­தியில் அந்த பெட்­டியைக் குறித்த நபர் சுமந்து வரு­வ­துடன், பதி­வு­களை முடித்­து­க்­கொண்டு பெட்­டி­யுடன் வெளியே வந்து அதனை இழுத்­துக்­கொண்டு செல்லும் காட்சி அதில் பதி­வா­கி­யுள்­ளது.

இத­னை­விட அவர் அப்­பெட்­டி­யுடன் பெஸ்­டியன் மாவத்தை பஸ் நிலை­யத்­துக்கு சென்­ற­மைக்­கான ஆதா­ரங்­க­ளாக மேலும் சில சீ.சீ.ரி.வி. காட்சிப் பதி­வு­க­ளையும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொலிஸார் சேக­ரித்­துள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர்  தெரி­வித்தர்.

அத்­துடன் அந்த பெட்­டியை பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு முச்­சக்­கர வண்­டி­யொன்­றி­லேயே அவர் கொண்டு சென்­றுள்­ள­மையும் அந்த முச்­சக்­கர வண்­டி­யையும் பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ள­தா­கவும் அந்த பொலிஸ் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­ வ­ரு­வ­தா­வது;

சட­ல­மாக மீட்­கப்­பட்ட கார்த்­தி­காவின் கணவர் வெளி­நா­டொன்றில் வேலை செய்து வரு­கின்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிநாட்­டுக்கு சென்­றுள்ள அவர் இது­வரை நாடு திரும்­ப­வில்லை. கார்த்­தி­கா­வுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந் நிலையில் அவர் கார்த்­தி­காவின் தாயாரிடமே வளர்ந்து வரு­வ­தாக பொலிஸார் தெரிவிக்­கின்­றனர்.

கார்த்­திகா இறு­தி­யாக தங்­கி­யி­ருந்த செட்­டியார் தெரு தங்­கு­மி­டத்தில் இருந்த சீ.சீ.ரி.வி. கண்­கா­ணிப்பு கமரா பதி­வு­களை விசா­ரணைக் குழு­வி­னரின் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் சந்­தேக நப­ரையும் பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

கார்த்­தி­கா­வுடன் கொழும்பில் இருந்த குறித்த நபர் தொடர்பில் கார்த்­தி­காவின் தாயா­ருக்கு தக­வல்கள் தெரிந்­தி­ருப்­ப­தாக கூறும் பொலிஸார் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக அந் நபர் கார்த்­தி­கா­வுடன் ஒன்­றாக இருந்­துள்­ள­மையும் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இதுவரை மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் ஒரு வாரத்­துக்கு முன்பு கார்த்­தி­காவே குறித்த தங்­கு­மி­டத்தில் அறை எடுத்து தங்­கி­யுள்­ள­துடன், பின்­ன­ரேயே கார்த்­தி­காவை சந்­திக்க வேண்டும் எனக் கூறிக்­கொண்டு குறித்த சந்­தேக நபர் அங்கு வந்­துள்­ள­தும் இதன் போது அவ்வி­ரு­வரும் ஒரே அறையில் தங்­கி­யுள்­ளதும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதனை விட கடந்த 29 ஆம் திகதி புதன் கிழமை அதி­காலை 12.15 மணிக்கும் 12.18 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் குறித்த நபர் குறித்த பெட்­டி­யுடன் தங்­கு­மி­டத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வது சீ.சீ.ரி.வி.கண்­கா­ணிப்பு கம­ராவில் பதி­வா­கி­யுள்­ளது.

இந் நிலையில் குறித்த பெண் கொலை செய்­யப்­பட்­டி­ருப்பின் அது 28 ஆம் திகதி பின்­னி­ரவில் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார் பயணப் பெட்­டி­யா­னது ஆள் நட­மாட்டம் இல்­லாத அதி­காலை வேளையிலேயே பஸ் தரிப்­பி­டத்தில் கைவி­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கிக்­கின்­றனர்.

கார்த்­தி­காவை கொலை செய்த நபர் அவரை பெட்­டியில் இட்டு தூரப் பிர­தேச பஸ் வண்­டி­யொன்றில் கைவிட்டுச் செல்லும் நோக்­கோடு பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­துக்கு வந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

அத்­துடன் அதிக நிறை கார­ண­மாக 15 ஆம் இலக்க அனு­ரா­த­புரம்–கொழும்பு பஸ் தரிப்பு இடத்­துக்கு அருகே அந்த பெட்டியின் சக்­கரம் ஒன்று உடைந்­துள்­ளதால் அதனை தொடர்ந்தும் தூக்கிச் செல்­வதில் எற்­பட்ட சிர­மத்­தை­ய­டுத்து அந்த பஸ் தரிப்பு நிலை­யத்­தி­லேயே சந்­தேக நபர் பெட்டியை விட்டுச் சென்­றி­ருக்­கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெரும்பாலும் யாழ். நோக்கி பயணிக்கும் பஸ் வண்டியொன்றில் அப்பெட்டியை கைவிட்டு செல்வது சந்தேக நபரின் நோக்கமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந் நிலையில் நேற்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னி லையில் கார்த்திகாவின் சடலம் மீது பிரேத பரிசோதனை ஒன்று முன் னெடுக்கப்பட்ட நிலையில் அதில் திறந்த தீர்ப்பொன்றே வழங்கப் பட்டது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டாரா, எப்படி கொலை செய்யப் பட்டார், உயிரிழப்புக்கான காரணம்

ஆகியவை தொடர்பில் தெளி வற்ற நிலைமை இருந்ததால் சடலத்தின் பாகங்கள் மேலதிக இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட் டுள்ளன. நேற்று மாலை வரை சந் தேக நபர் கைது செய்யப்பட்டிராத நிலையில் விசாரணைகள் தொடர்ந்தன.

Share.
Leave A Reply