லண்டன்: சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக மறைந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ஹீத் மீது விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் பிரதமராக கடந்த 1970ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் எட்வர்ட் ஹீத்.கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 2008ம் ஆண்டு தனது 89வது வயதில் மரணம் அடைந்தார்.

ஹீத் மீது கடந்த 1990ம் ஆண்டுகளில் சிறுமிகளைப் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால், அதை போலீசார் சரிவர விசாரிக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. ஹீத்தால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் மீது பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply