ரஷ்யாவில் 14 பேரைக் கொன்று அவர்களது உடல் பாகங்களைத் துண்டு துண்டுகளாக வெட்டி, அதனை சாப்பிட்ட 68 வயது பாட்டியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்தவர் தமரா சம்சனோவா (68). ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்த தமராவை, அவரது நண்பர் வாலண்டினா உளனோவா (79) என்பவரைக் கொலை செய்ததாக கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் தமராவின் வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம், கொலை செய்யப்பட்ட வாலண்டினாவின் உடல் பாகங்களை, தமரா ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

டைரி…
மேலும், அந்தச் சோதனையின் போது தமராவின் டைரி ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தமரா பாட்டி எழுதியிருந்த தகவல்களைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.14 பேர்…

இதுவரை 14 பேரைக் கொன்று, அவர்களின் தலை, நுரையீரல், மற்றும் கை, கால்களை வெட்டி எடுத்த தகவல்களை அந்த டைரியில் தமரா குறித்து வைத்திருந்தார்.

கணவரும் ஒருவர்...
தமராவால் கொலை செய்யப்பட்ட 14 பேரில் அவரது கணவரும் ஒருவர் என போலீசார் கூறுகின்றனர். மேலும், ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்தி வந்த இந்தப் பாட்டி, நரமாமிசம் சாப்பிடுபவராக வாழ்ந்துள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு முன் மாயமானவர்…
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில், 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒரு வியாபாரியின் அடையாள அட்டையும் தமராவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலை, கால் மற்றும் கைகளை பாட்டி வெட்டி எடுத்து உள்ளார்.
தண்டனைக்கு தயார்…
கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்ட போது, ‘இந்த நீதிமன்றம் கொடுக்கும் எத்தனை வருட சிறை தண்டனையையும் ஏற்று கொள்ளத் தயாராக இருக்கிறேன்’ எனத் தெளிவாக கூறினாராம் தமரா.
Share.
Leave A Reply