கேர்ணல் கடாபியின் 3-ம் மகன் மீதான உளவியல் சித்திரவதைகள் – வீடியோ இணைப்பு !! தனது சகாக்கள் கண்முன்னே வதைக்கப்படும் காட்சிகளை 5 நேரம் காணும் நிலையில் நேற்றைய அதிபரின் மகன்.
உளவியல் ரீதியான சித்திரவதையின் ஒரு முகம் இது. இன்டரகேசன். புலன் விசாரனை. இதை சரியாக அனுபவித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எகிப்தில் அப்துல் நாஸரின் காலத்தில் அதனை அனுபவித்த இஃவான்களுடன் சில நாட்கள் வாழ்ந்து பார்க்க வேண்டும்.
அப்போது தெரியும் இன்டரகேசன் என்றால் என்ன என்று. ஒரு கைதியை சுற்றி பல இன்டரகேசன் ஒபிஸர்கள் நின்று விசாரிப்பது எழுத்துக்களால் சொல்ல முடியாத பயங்கர நிகழ்வு.
காலம் மாறி விட்டது வேகமாகவே. உடல் வதைகள் போதாது என்று இப்போது உளவியல் ரீதியான சித்திரவதைகளும் விதம் விதமாக நிகழ்த்தப்படுகின்றன. சட்டத்தின் நிழலின் கீழ் உள்ள பாதாள அறைகளில்.
இதற்கு லிபியாவின் அதிபர் கேர்ணல் முஹம்மர் அல்-கடாபியின் மூன்றாவது மகன் அல்-சாதி கடாபியும் விதிவிலக்கல்ல.
தனது தந்தை நிர்மாணித்த இரகசிய பொலீஸாரின் சிறைக்கூடங்களில், தனது தந்தை உருவாக்கி செயற்படுத்திய சித்திரவதை முறைகளில், தனது தந்தை இஸ்லாமியவாதிகளை சிதைத்த பாணியில், அவரது தந்தை சேகரித்த லிபியாவின் செல்வத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளினால் வதைக்கப்படுகிறார்.
லிபியாவின் ஸ்பெசல் போர்ஸஸின் துணைக் கொமாண்டர். லிபிய சிவில் யுத்தத்தின் போது சீஃப் கொமாண்டராகவும் பின்னாட்களில் செயற்பட்டவர்.அந்நாட்டின் தேசிய உதைபந்தாட்ட அணியில் அங்கம் வகித்தவர். தந்தையின் அனைத்து மக்கள் விரோத செயற்பாடுகளிற்கும் கைங்கரியங்களிற்கும் துணை நின்றவர்.
மார்ச் 2014-ல் நைஜர் தேசத்தில் கைது செய்யப்பட்டு லிபியாவிற்கு நாடுகடத்தப்பட்டவர். போதை, மது, பெண் என அனைத்து தவறான நடத்தைகளையும் தினமும் தவறாமல் செய்யும் லிபியன். பெங்காஸி கலவரங்களின் போது சிவிலியன்களை சுட்டு தள்ளும் உத்தரவை இவர் இட்டிருந்தார்.
இப்போது லிபிய சிறையில் இருக்கும் இவரை சர்வதேச நியதிகளின் படி அவரது சட்டத்தரணிகள் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நைஜரில் இருந்து இவர் நாடு கடத்தப்பட்டது சர்வதேசரீதியில் தெரிந்த ஒரு விடயமாக இருப்பதனால் இவரை சின்னபின்னப்படுத்தி கொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் லிபிய அரசின் விசாரணை அதிகாரிகள்.
அண்மையில் வெளியான விடியோவில் அவர் மீதான இன்டரகேசன் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சட்டவிரோத நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
அதனால் உளவியல் சித்திரவதை மூலம் அவரை மனதளவில் ஊனமாக்கி பைத்தியமாக மாற்றும் செயற்த்திட்டம் அவர்களால் தெளிவாகவே முன்னெடுக்கப்படுகிறது. அதனை காண்பிக்கும் வீடியோவே இது. மிருகங்கள் மிருகத்தை வேட்டையாடும் கணப்பொழுதுகள்மூலம்: கைபர் தளம் (Khaibar Thalam)