தனது ஐந்து பிள்ளைகளையும் அனாதரவாக கைவிட்டு கள்ளக் காதலனுடன் சென்ற தாயையும். கள்ளக் காதலனையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை (27.08.2015) விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீத வான் நீதிமன்ற நீதிபதியுமான எச். எம். முஹம்மட் பkல் உத்தரவிட்டார்.

கடந்த வியாழக்கிழமை (13) மன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

அட்டாளைச்சேனை பாலமுனை – 4 ஆம் பிரிவு விளையாட்டு மைதான வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் (27 வயது) ஒருவர் தனது பிள்ளைகள் 5 ஐயும் அனாதரவாக கைவிட்டு விட்டு கள்ளக் காதல னுடன் இரு மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

தாய் ஒருவர் தனது 5 பிள்ளைகளையும் கைவிட்டு சென்றுள்ளதாகவும் அதனால் பிள்ளைகள் அனாதரவாக இருப்பதாக பொலிசாருக்கு கடந்த புதன்கிழமை (12) தகவல் கிடைத்ததாகவும் அதனையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதையடுத்து பால முனை பிரதேசத்தில் வைத்து தாயையும். பிள்ளைகள் அனாதரவாக இருந்ததற்கு உடந்தையாக இருந்த கள்ளக் காதலனையும் பொலிசார் கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத் தினர்.

பிள்ளைகளின் தகப்பன் வெளிநாடு   ஒன்றிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றிருப்பதாகவும் ஐந்து பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கு 12 வயது மூன்று பிள்ளைகள் பாடசாலை செல்வதாகவும் பிள்ளைகள் தாயின் சகோத ரனின் வீட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

Share.
Leave A Reply