ஏ-9 வீதியில் கொடிகாமம், பூநகரியில் வானொன்று மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் மேலும் ஐந்துபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

kodikamamஇன்று அதிகாலை 4.30 மணியளவில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய உறவினர்களை அழைத்துகொண்டு வீட்டுக்கு செல்கையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

accidentaas

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

accidentasa

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply