துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.
ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்.
வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?
இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.
முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன். இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம்.
சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில் தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பல தடவை வந்தார்.
அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.
திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.
தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள் என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம். காந்தி மேடைக்கு வந்துவிட்டார்.
அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.
அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார்.
என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, ‘உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள்.
கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.
எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்
நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.
நான் தீண்டாமை முற்றாக வேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள்.
அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள்.
அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.
இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.
தனது வீட்டிலுள்ள பிராமணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள்.
சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள்.
பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.
நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர்
இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.
இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள்.
இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.
முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.
ஜாதியை உருவாக்கிய பிராமணன். பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.-– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்…. )
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள் .
(முன்னைய தொடர்களை பார்வையிட …. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 1…2..3..4..5..6..7 – 8)
கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார் — காந்தியார்.
“காந்தியார் ஆயிரம் புரட்டு, பித்தலாட்டம் பேசி இருந்தாலும், ஏதோ தவறி ஓர் இடத்தில் உண்மையையும் கூறி இருக்கின்றார்.” இந்தக் கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி’’ என்றார்.
பார்ப்பான் திட்டினான்.
“உன் கோயில் மட்டும் அல்ல, உன் கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார்.’’
ஆண் கடவுளாக இருந்தாலும் சரி, பெண் கடவுளாக இருந்தாலும் சரி, விபசாரம் செய்யாத ஒன்றையும் காட்ட முடியாது.
கடவுள் பட்டியலைப் பார்த்தால், ஒவ்வோர் ஆண் கடவுளுக்கும் மனைவிகள், கூத்திகள் என்றும் பெண் கடவுளுக்குக் கணவர்கள்-சோர நாயகர்கள் என்றும் இருக்கும்.
ஒரு பெண்ணை நிர்வாணமாக நிறுத்தி வைத்து அவள் பெண் குறிக்குப் பூசையிடும் வழக்கமும் ஆசாரத்தில் உண்டு.
மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள். அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள்.
யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் கடவுள்கள் புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த்தால் கும்பிடுகிறான்.
ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் அய்ந்து முகம், 10 முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண்டாயிரம் கையுடையாள்.
இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை?
இந்து மதம் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா! எழுத்தால் விளக்கொணாதது.
சான்றுக்கு ஒரு சில.
1. சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களுமற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை வினோதங் காண்பதற்கென்று பெண்வேடம் பூண்டு அங்குச் சென்றான்.
இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந் நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரவேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான்.
இதனால் சுக்ரீவன் பிறந்தான்.
2. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.
3. தவ வலிமை மிக்க பஸ்மாசுரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பஸ்மாசுரணை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவை, உயிருக்குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹரபுத்திரன் பிறந்தான். இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா?
4. பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சித்திரக் கூடத்தில் ஆண்-பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவியத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு, பக்கத்திலிருந்த பார்வதியைப் பெண் யானையாக்கிப் புணர்ந்து, கணபதியைப் பெற்றான்.
5. சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.
6. பிரமன் திலோத்தமையைப் படைத்து, அவளழகைக் கண்டு மோகித்து, அவள் பிரமன் செயல் கண்டு பயந்து பெண்மானுருக் கொண்டோட பிரமன் அவளைத் துரத்திக் கொண்டு போய்ப் புணர்ந்தான்.
7. பிரமன், ஒரு நாள் காமவெறி உச்சமடைந்தவனாய் வனத்தில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது, ஒரு புதரில் பெண் கரடி ஒன்றிருக்கக் கண்டு அதனுடன் புணர, அதன் பலனாக ஜாம்பவந்தன் பிறந்தான்.
8. பாரிஷதன் என்பவனின் மனைவி வபுஷ்டமை என்பவள் மீது இந்திரன் காமங்கொள்ள, அவள் அவனுக்கு இணங்காமற்போக, இந்திரன் எப்படியாவது அவளைச் சேர்ந்தேயாகவேண்டு மென்று எண்ணிச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் பாரிஷதன் அஸ்வமேதம் நடத்தினான். யாக குதிரையுடன் யாக கர்த்தாவின் மனைவியைப் புணர வைப்பது அஸ்வமேதத்தின் முக்கியச் சடங்காகையால், தான் யாக குதிரையாக இருந்தால் பாரிஷதன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து யாகப் புரோகிதர்களே சேர்த்து வைப்பார்களாகையால் தான் யாக குதிரையாக வேண்டுமென்று இந்திரன் உறுதிசெய்துகொண்டான்.
அதன்படி அஸ்வமேத யாகம் நடந்தபோது இந்திரன் யாக குதிரையைக் கொன்று அதனுடலில் தான் புகுந்து கொண்டான். யாகமுறைப்படி யாககர்த்தாவாகிய பாரிஷதனின் மனைவியாகிய வபுஷ்டமையின் பெண் குறியில் யாக ஆண் குதிரையின் குறியை யாகப் புரோகிதர்கள் சேர்த்துவைத்த சமயத்தில் இந்திரன் தன் காம எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.
9. அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாககர்த்தாவின் பத்தினியை, யாக மிருகத்துடன் புணரவைக்கும் வேலையை யாக கர்த்தாவும் யாகப்புரோகிதர்களுக்கும் சேர்ந்து செய்வர்.
10. பூமியைப் பாய்ப்போலச் சுருட்டிக்கொண்டு கடலில் போய் ஒளிந்த இரண்யாக்ஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக் கண்டு பூதேவி மோகித்துக் கலவி செய்ய, இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்.
இவை மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா?
நாம் இந்துக் கடவுள்களை மட்டுமே தாக்குவதில், இந்து மதத்தை எதிர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறோம் என்பது உண்மைதான்!
கொச்சைப்படுத்துகிறோம் என்பது தவறு!
மேன்மையான ஒன்றைக் கீழ்மைப்படுத்துவதற்கே கொச்சை என்பது பொருந்தும்!
ஆரியப் பார்ப்பனர் தங்களின் இச்சைபோலகொச்சைகளையே பச்சைத்தனமாக மெச்சிப் புகழுமாறு எழுதி வைத்து எமது இனத்தையே கொச்சைப்படுத்துவது இந்து மதமும் அதன் கடவுள்களுந்தாம்!
எம்மினம் எத்தனையோ நூற்றாண்டுகளாக ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சி வஞ்சக வலையில் சிக்கிக் கொண்டு தவிப்பது தள்ளாடுவது தலை சாய்ந்து கிடப்பது அனைத்தையும் உலகில் நல்லோர் எல்லோரும் அறிவர்!
ஏன் இந்து தெய்வங்களை மட்டும் அதிகம் தாக்குகிறோம்?
இந்து மதமும் அதன் தெய்வங்களும் மட்டுமே எங்களுடையதாக எமது இனத்தின் வீழ்ச்சிக்கு இழிவிற்கு உலகோர் பழிப்பிற்குக் காரணமாக இருப்பதால்!
எப்படி என்பதை ஒரு நூற்றாண்டாக உலகின் முன் எடுத்து விளக்குகிறோம்!
வேண்டுமானால் – இதோ! சில..எங்கள் மக்களை (அசுரர்கள்) இராட்சசர்கள் என்ற பெயரில் அதாவது தமிழர்களை சூத்திரர்கள் என்பது போல) சிவன் முதல் காளிகள் வரைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருப்பதும் சூலத்தால் கிழிப்பதும் இந்துக்களின் தெய்வமா? இஸ்லாம், கிறிஸ்தவத் தெய்வங்களா?
தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதையே வேதம், சாத்திரம், நடத்தை என ஆக்கி நாயினுங் கீழாய் வாழ வைத்ததும், பிராமணருக்குத் தொண்டு செய்யவே சூத்திரரைப் படைத்தேன் என்பதும், பிராமணனுக்குச் சமமாகச் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் சூத்தை (புட்டம்) வெட்டு என வெட்டியதும், கண்ணைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என மூடர் ஆக்கியதும் இந்து தெய்வங்களா? கிறித்து, இசுலாம் தெய்வங்களா?
தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன், மகளை மனைவியாக்கிக் கொண்டவன், ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன், அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்.
ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா? – வேறு எந்த மதத்தில்?
இவர்களுக்குச் சாதி வாரியாகக் கோயில்கள் கட்டிக் கொண்டாடும் எங்கள் மக்களை அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்த ஓர் ஆரியப் பரத்தையைப் பத்தினி எனக் கொண்டு அக்கினிக் குழியிறங்கும் எமது மக்களை மீட்பதா? அப்படியே அடிமைகளாக விட்டுவிடுவதா?
இந்த இழி பிறவிகளைக் கடவுள்கள் என்று கோயில்கள் எடுத்து கருவறைக்குகள் போனால் தீட்டாகிவிடும் என்று சூத்திரனாக வெளியே நிற்கிறானே இந்த மதத்திலா? வேறு எந்த மதத்தில்?
சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் உங்கள் வேதத்தில் மதத்தில் தெய்வங்களின் விருப்பத்தில் உள்ளபடி தெருவில் கோயிலில் உள்ளே விடாமல் விரட்டப்படும் மக்களைப் பள்ளிவாசல்களில், சர்ச்களில் ஒன்றாக சமமாக அமர்ந்து தொழுகை நடத்த அனுமதிக்கும் அன்பு காட்டும் கிறித்து, இசுலாம் மதங்களைக் கண்டிக்க என்ன இருக்கிறது?
வைப்பாட்டி வீட்டிற்கு அதாவது சின்ன வீட்டிற்குப் பெண்டாட்டிச் சாமிகளுக்குத் தெரியாமல் இரவிலே போகும் தெய்வங்கள் இசுலாம், குறித்து மதங்களில் இருந்தால் எழுதலாமே!
சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து பிள்ளை பெறுவதும் நாரதனும் கிருஷ்ணனும் சேர்ந்து பிள்ளை பெறுவதும் இந்த நாயினும் கேடானவர்களுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடுவதும் போன்ற தெய்வங்கள் இசுலாத்தில், கிறித்துவில் இருந்தால் எழுதலாமே!
நந்தன் உள்ளே வரக் கூடாது என்பதற்காக நந்தியை விலகச் சொன்ன திருப்பங்கூர் சிவனும், நெருப்பில் குளித்து வேதியனாகிய பின் தான் உள்ளே வரலாம் என்ற தில்லைக் கூத்தனும் எந்த மதத்தில்?
விநாயகர் வல்லபையின் பெண் குறியில் தும்பிக்கையை வைத்து அடைத்துக் கொண்டாரே யாருக்கு ஆதரவாக?
ஆபாசக் கடவுள்கள். ஆணை ஆண் புணரும் மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவைகளல்லவா?
ஒவ்வோர் ஆண் கடவுளுக்கும் மனைவிகள், கூத்திகள் என்றும் பெண் கடவுளுக்குக் கணவர்கள்-சோர நாயகர்கள் என்றும் இருக்கும். ஆரியர்களுடைய மதம் நமக்குக் கற்பித்துள்ள கடவுள்களின் தன்மை அம்மம்மா! எழுத்தால் விளக்கொணாதது.
இந்து கடவுள் பட்டியலைப் பார்த்தால், ஆண் கடவுளாக இருந்தாலும் சரி, பெண் கடவுளாக இருந்தாலும் சரி, விபசாரம் செய்யாத ஒன்றையும் காட்ட முடியாது.
ஒவ்வோர் ஆண் கடவுளுக்கும் மனைவிகள், கூத்திகள் என்றும் பெண் கடவுளுக்குக் கணவர்கள்-சோர நாயகர்கள் என்றும் இருக்கும்.
THANKS: VIDUTHALAI.COM.