கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கணவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மனைவி, பிளஸ் 2 மாணவனுடன் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னதம்பி (40). இவரது மனைவி காவேரியம்மாள் (37). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் காவேரியம்மாளுக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த சின்னதம்பி, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 13ம் தேதி இரவும் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த காவேரியம்மாள், பிளஸ் 2 மாணவனை அழைத்து கணவனை தீர்த்து கட்டிவிடலாம் என கூறியுள்ளார்.

அதன்படி இருவரும் சேர்ந்து அரிவாளால் சின்னதம்பியின் தலை, தோள்பட்டையில் சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உடனே அவர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். படுகாயமடைந்த சின்னதம்பியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய காவேரியம்மாள் மற்றும் அவரது கள்ளக்காதலனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply