குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 4 லட்சத்து 23 ஆயிரத்து 529 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அதே மாவட்டத்தில் தயாசிறி ஜயசேகர ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 532 வாக்குகளை பெற்றுள்ளார்
அம்பாந்தோட்டையில் நாமல், சஜித்துக்கு அதிக விருப்பு வாக்குகள்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாமல் ராஜபக்சவும், ஐதேக சார்பில் சஜித் பிரேமதாசவும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இதன்படி நாமல் ராஜபக்ச, 127,201 விருப்பு வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதையடுத்து மகிந்த அமரவீர, சமல் ராஜபக்ச, டி.வி.சானக ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ச தோல்வியடைந்தார்.
அதேவேளை, ஐதேக சார்பில், சஜித் பிரேமதாச 112,645 விருப்பு வாக்குகளுடன் முதலிடத்தையும், திலீப் வேதாராச்சி 65,391 விருப்பு வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளனர்.
ஜேவிபி சார்பில் நிகால் கலப்பதி தெரிவாகியுள்ளார்.