சென்னை: வாலு படம் வெளியாகி தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்தப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று தியாகராய நகரில்(சென்னை) நடந்தது.
இதில் சிம்பு, டி.ராஜேந்தர், இயக்குநர் விஜய் சந்தர், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் வாலு திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து கலந்து கொண்ட அனைவரும் பேசினர்.
நடிகர் சிம்புவிடம் வாலு படம், அவரின் திருமணம் மற்றும் நயன்தாராவைக் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிம்பு பின்வருமாறு சுவாரசியமான பதில்களை அளித்தார்.

19-1439966945-simbu345

அனைவருக்கும் நன்றி
‘வாலு’ படம் வெளிவருவதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டன, அந்தத் தடங்கல்களை தாண்டி நடிகர் விஜய் மற்றும் எனது தந்தை, தாய் உள்ளிட்ட பலரின் உதவியால் படம் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வாலு பிரச்சினைகளில் நான் மனம் உடைந்து நின்றபோது ரஜினிகாந்த், அஜித்குமார் என பலர் ஆதரவாக பேசினார்கள், அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

19-1439966931-simbu35-600

பக்குவம் அடைந்து விட்டேன் இப்போதெல்லாம் ஆன்மீக ஈடுபாடு காரணமாக நான் நிறைய பக்குவப்பட்டு விட்டேன். வாலு படத்துக்கு வந்த பிரச்சினைகளுக்கான அனைத்து காரணங்களையும் நானே ஏற்கிறேன். முதுகில் குத்துபவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர்கள் அனைவரையும் கடவுள் பார்த்துக்கொள்வார்.19-1439966883-simbu567

வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள்
இனிமேல் வருடத்துக்கு 2 அல்லது 3 படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். என் திருமணம் எப்போது என்று அனைவரும் கேட்கிறார்கள். அதையும் கடவுளே முடிவு செய்வார். தனியாக நான் வாழவேண்டுமா? திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? என்பது எல்லாம் கடவுளின் கைகளில் தான் உள்ளது.
19-1439966964-simbu-nayantara-idhu-nammaa
நயன்தாராவின் பிரிவு
நயன்தாராவை நான் பிரிந்தது பற்றியே எல்லோரும் கேட்கிறார்கள். நயன்தாராவை விட்டு நான் பிரிந்த பிறகு மீண்டும் அவருடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடிக்கிறீர்களே? என்றும் கேட்கிறார்கள். காதலில் நான் நிறைய அடிபட்டு விட்டேன். நயன்தாராவும், நானும் எதிர்மறையான சிந்தனையோடு பிரியவில்லை. ஒரு சூழ்நிலை காரணமாக சேர்ந்து இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே பிரிந்துவிட்டோம். கோபித்துக்கொண்டு விலகவில்லை. அதனால் தான் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.19-1439966938-simbu

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கிறார்களா? என்று கேட்கிறீர்கள். அவர்கள் காதலிப்பதாக இதுவரை என்னிடம் சொல்லவில்லை. இதேபோல் தான் பிரபுதேவாவை நயன்தாரா காதலிக்கிறாரே? என்று கேட்டார்கள். நான் நடக்கும்போது கேளுங்கள் என்று பதிலளித்தேன். அது நடந்ததா?. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதலித்தால் சந்தோஷம் தான். அவர்களுடைய திருமணத்தையும் நானே நடத்தி வைப்பேன்,என்று பெருந்தன்மையாக பதிலளித்திருக்கிறார் சிம்பு. ஒருவேளை நயன்தாரா திருமணத்தை நடத்தி வச்சிட்டு எங்கிருந்தாலும் வாழ்கன்னு சிம்பு பாட்டுப் பாடுவாரோ…..

Share.
Leave A Reply