அமெரிக்காவில் பெண் ஒருவர் தான் பெற்ற 3 ஆண் குழந்தைகளை கொலைசெய்துள்ளார். தனது கணவர் தனது மகளைவிட, மகன்கள் மீது அதிகம் கவனம் செலுத்தியமையேகொலைகளுக்கான காரணமென அப்பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
அமெரிக்காவின் ஒஹியோவை சேர்ந்த தம்பதியினர் ஜோசப் பில்கிங்டன் – பிரிட்டானி. பிரிட்டானி கடந்த செவ்வாய் அன்று காலை 3 மணியளவில் 911 அவசர சேவைக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
தனது மூன்றுமாத குழந்தை நோவக் மூச்சு விடாமல் இருப்பதாக கூறி உள்ளார். உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதே வீட்டில் இதுபோன்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம்பெற்றுள்ளதால் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த வருடம் ஜூலை மாதம் இந்த தம்பதியினரின் 3 மாத ஆண் குழந்தை நியால் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஜோசப் பில்கிங்டன், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும், நியால் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டுபிடித்து உள்ளார். குழந்தை நியால் உயிரிழப்புக்கு காரணம் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர் ஏப்ரல் மாதம் 16-ம் தேதியும் அவர்களுடைய 4 வயது மகன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். 4-வயது சிறுவன் கவினும் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டான்.
ஆனால் உயிரிழப்புக்கான காரணம் தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் பிரிட்டானி தனது மூன்று குழந்தைகளையும் நான் தான் கொலைசெய்தேன் என்று ஒப்புக் கொண்டு உள்ளார்.
பிரிட்டானி கூறிய பதிலானது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிரிட்டானி, எனது கணவர் ஆண் குழந்தையின் மீதே அதிகம் கவனம் செலுத்துகிறார், இதனால் எனது மகள் தனிமை படுத்தப்படுகிறார், அவளுக்கு இந்தநிலையே நீடித்துவிடுமோ என்று பயந்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.
அவர்களது பெண் குழந்தைக்கு தற்போது 4-வயது. மூன்று குழந்தைகளையும், தலையனையை கொண்டு முகத்தில் அழுத்தி கொலைசெய்து உள்ளார்.
“பெண் தனது மகள் அன்பு கிடைக்காமல், தனிமைபடுத்தப்படாமல் இருக்க பாதுகாப்பாக இதனைசெய்தாக நினைத்து உள்ளார் ” என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.