இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதில் காலியில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியிடம் 63 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு பி.சரவணமுத்து விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

இந்திய அணி 4 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் முதலாவது விக்கெட்டும் 12  ஓட்டங்களைப் பெற்ற வேளை 2 ஆவது விக்கெட்டும்  பறிக்கப்பட்டது.

இந்நிலையில் ராகுலுடன் 3 விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த விராட் கோலி மிகவும் நிதானமாக ஆடி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
இந்திய அணி சார்பில் ராகுல் 108 ஓட்டங்களையும் விராட் கோலி 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இன்றைய முதலாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் ரோஹித் சர்மா 79 ஓட்டங்களுடனும் ஷா 19 ஓட்டங்களுடன் களத்திலுள்ளனர்.

Share.
Leave A Reply