அம்­பாறை மாவட்­டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தலை விட இம்­முறை 18ஆயி­ரத்து 319 வாக்­குகள் அதி­க­மாக அளிக்­கப்­பட்­டுள்­ளன.

2010இல் 26ஆயி­ரத்து 894 வாக்­குகள் த.தே.கூட்­ட­மைப்­பிற்குக் கிடைக்­கப்­பெற்­றன. இம்­முறைத் தேர்­தலில் 45ஆயி­ரத்து 213 வாக்­குகள் கிடைத்­துள்­ளன. அதா­வது 18ஆயி­ரத்து 319 வாக்­குகள் அதி­க­மாக அளிக்­கப்­பட்­டுள்­ளன.

கூடு­த­லான வாக்­குகள் பொத்­துவில் தொகுதியில் அளிக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு கடந்த தேர்­தலில் 14248 வாக்­குகள் அளிக்­க­பட்­டி­ருந்த அதே­வேளை இம்­முறை 25147 வாக்­குகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன.சுமார் 10ஆயிரம் வாக்­குகள் இங்கு கூடு­த­லாகும்.

சம்­மாந்­துறைத் தொகு­தியில் கடந்­த ­த­டவை 3972 வாக்­கு­களும் கல்­மு­னைத்­தொ­கு­தியில் 7947வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டி­ருந்­தன. இம்­முறை அத்­தொகை முறையே 7540 வாக்­கு­க­ளா­கவும் 10847வாக்­கு­க­ளா­கவும் உயர்ந்­துள்­ளன.

கடந்த தடவை தபால் வாக்­குகள் 713 .ஆனால் இம்­முறை 1854ஆக உயர்ந்­துள்­ளது.

கடந்த தடவை 11ஆயி­ரத்து 130 வாக்­கு­களைப் பெற்று பொடி­யப்பு பிய­சேன எம்.பி.யாகத் தெரி­வா­கி­யி­ருந்தார். இம்­முறை 17779ஆயி­ரத்து வாக்­கு­க­ளைப்­பெற்ற அரி­ய­நா­யகம் கவிந்­திரன் கோடீஸ்­வரன் ரொபின் எம்.பியா­கத்­தெ­ரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

இது­வரை தெரி­வான த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுள் அதிகூடிய வாக்குகளைப்பெற்றவர் கோடீஸ்வரன் ரொபின் என்பவர் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply