திருகோணமலைக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார்.
அங்கு அவர் மீள் குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதன், அமைச்சர் ஹக்கீம், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
யுத்தமானது கருணை, அன்பு, இரக்கம் என்பவற்றை இல்லாமல் செய்து விடுகிறது என்றும் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் யுத்தம் பொருத்தமானது அல்ல என்றும் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தனது அரசாங்கம் அரசாங்கம் மீண்டும் இந்நாட்டில் யுத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையில் செயற்ப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த விஜயத்தின்போது , சம்பூரில் பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்மன் ஆலயத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.