முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விடம் நேற்று 6 மணி நேரம் விஷேட விசா­ரணை நடத்தப்பட் டது.

பாரிய மோசடி, ஊழல், அதி­கார துஷ்­பி­ர­யோகம், அரச சொத்­துக்கள் மற்றும் சிறப்­பு­ரி­மை­களை துஷ்­பி­ர­யோகம் செய்­தமை தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்குழுவே இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது. பண்­டா­ர­நா­யக்க

சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் 5 ஆம் பிரிவில் அமைந்­துள்ள இந்த ஆணைக் குழுவின் அலு­வ­ல­கத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

103 ஆம் இலக்க மூடிய அறைக்குள் இடம்­பெற்ற இந்த விசா­ர­ணை­களில் ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வனம் தொடர்பில் இதன் போது பெரிதும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே ஜனா­தி­பதி ஆணைக் குழு முன்­னி­லையில் ஆஜ­ராகுமாறு கோத்­த­பாய ராக்­ஜ­ப­க்ஷ­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் அதில் பங்கேற்றிருக்கவில்லை.

இறு­தி­யாக தேர்தல் காலத்தின் போது கோத்தபாயவை விசாரணைக்கு ஆணைக்குழு அழைத்­தி­ருந்தது. எனினும் தேர்தல் காலம் என்­பதைக் கருத்தில் கொண்டு விசா­ர­ணை­களை ஆணைக்குழு பிற்போட்­டது.

கடந்த வாரம் மிரி­ஹான பொலிஸார் ஊடாக அறி­வித்தல் அனுப்­பிய ஆணைக் குழு நேற்­றைய தினம் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை ஆணைக் குழு முன்­னி­லையில் ஆஜ­ராகுமாறு உத்­த­ரவு பிறப்­பித்­தது.

இந் நிலையில் நேற்று முற்­பகல் 10.10 மணிக்கு தனது இரு உத­வி­யா­ளர்­க­ளுடன் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மா நாட்டு மண்ட­பத்­துக்கு கோத்­த­பாய ராஜ­பக்ஷ வருகைத் தந்தார். இதன் போது அங்­கி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் கோத்­த­பய ராஜ­ப­க்ஷவை சூழ்ந்­து­கொண்­ட­துடன் ஆணைக் குழு முன்­னி­லையில் ஆஜ­ரா­வது குறித்து வின­வினர்.

தனது கையில் இருந்த கோவையை பார்த்­த­வாறே இதற்கு பதி­ல­ளித்த கோத்­த­பாய ராஜ­பக்ஷ ‘ இது ஒரு சின்ன விடயம்….‘ என கூறி­ய­வாறே 103 ஆம் இலக்க விசா­ரணை அறைக்குள் சென்றார். இத­னை­ய­டுத்து ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் மாலை 4.20 மணி வரை தொடர்ந்­தது.

ரக்ன லங்கா நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை கடந்த ஜனா­தி­பதி தேர்தல் காலத்தின் போது தேர்­தல்கள் பணிகளுக்கு பயன்­ப­டுத்­தி­யமை, அந் நிறுவன ஆயு­தங்­களை வாட­கைக்கு வழங்­கி­யமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் இதன் போது விரி­வாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரக்ன லங்கா நிறுவ­னத்­துக்கு சொந்­த­மான சுமார் 500 ஊழி­யர்­க­ளையும் 60 இலட்சம் ரூபா­வையும் கடந்த ஜனாதிபதி தேர்­தலின் போது தேர்தல் பணிகளுக்காக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் விசா­ர­ணை­களில் விஷேட கவனம் செலுத்­தப்­பட்­ட­தாக குறித்த ஆணைக் குழுவின் செய­லாளர் லெசில் டி சில்வா தெரி­வித்தார்.

விசா­ர­ணை­களின் பின்னர் விசா­ரணை அறையில் இருந்து வெளியேவந்த கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­விடம் ஊடகவிய­லா­ளர்கள் மீண்டும் கேள்­வி­களை எழுப்பினர்.

கேள்வி: என்ன விடயம் தொடர்பில் உங்­களை விசா­ரணை செய்­தார்கள்?

கோத்தா: ரக்ன லங்கா நிறு­வனம் தொடர்பில் தான் விசா­ரணை செய்­தார்கள். உங்­க­ளுக்கும் இப்­போதுச் செய்திகள் இல்­லை­யல்­லாவா?

கேள்வி: நீங்கள் அங்கு என்ன சொன்­னீர்கள்?

பதில்: அவற்றை சொல்­வது சரி­யில்­லை­யல்­லவா. அதனால் அவை தேவை­யில்லை. என்று கூறி­ய­வாறே தனது வாக­னத்தில் ஏறி அங்­கி­ருந்து வெளி­யேறிச் சென்றார்.

ரக்ன லங்கா நிறுவ­ன­மா­னது ஓய்­வு­பெற்ற முப்­படை வீரர்­களைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட பாது­காப்பு அமைச்சின் கீழ் இருந்த நிறு­வ­ன­மாகும்.

இதன் தலை­மை­ய­கமும் பண்­டா­ர­ந­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­தி­லேயே இயங்­கிய நிலையில் அதற்கு சீல் வைக்­கப்­பட்டு அது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை குற்றப் புல­னய்வுப் பிரிவு மேற்­கொன்டு வரு­கின்­றது.

இந் நிலை­யி­லேயே கடந்த 100 நாள் அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன பாரிய ஊழல் மோச­டிகள் மற்றும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்கள் உள்­ளிட்­ட­வற்றை விசா­ரணை செய்ய விஷேட ஜன­தி­பதி ஆணைக் குழு­வொன்றை அமைத்தார்.

உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட இந்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் உயர் நீதி­மன்றின் நீதியரசர் அனில் குணரத்ன, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, ஓய்வுபெற்ற கணக்காய்வளர் நாயகம் சரத் மாயாதுன்ன மற்றும் ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிற்றர் ஜெனரால் ஐய்யாதுரை கனனதாஸன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந் நிலையில் குறித்த ஆணைக் குழுவிற்கு ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடு தொடர்பிலேயே நேற்றைய விசாரணைகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply