நியூயார்க்: ரொமாண்டிக்காகச் செய்ய ஆசைப்பட்டு, சிலர் கடைசியில் பல்பு வாங்கிக் கொள்வார்கள். அப்படி பெரிய பல்பு வாங்கியவரின் கதைதான் இது.
“எதற்கோ” திட்டமிட்டு காதலி வீட்டுக்குப் போன இளைஞர், திடீரென காதலியின் அம்மா வந்து விட்டதால், காதலி படுத்துத் தூங்கிய கட்டிலுக்கு கீழேயே முழு இரவையும் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தனது சோகக் கதையை சமூக வலைதளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இது இப்போது வைரல் ஆகி விட்டது
கசியமாய்… ரகசியமாய்
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞர் சம்பவத்தன்று தனது தோழியைச் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
எப்போதும் இரவு 10.30 மணிக்கு மேல் காதலியின் தாயார் வந்து விடுவார். காலம் செய்த கோலம்… ஆனால் இளைஞரின் நேரமோ, என்னவோ, காதலியின் அம்மா, அன்று சற்று முன்னதாகவே வந்து விட்டார்.
இதனால், கட்டிலுக்கு அடியில் பதுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இளைஞர். விடியும் வரை வெளியேற முடியவில்லை.
பார்த்தீங்களா மக்களே… இதனால் அங்கிருந்தபடியே என் நிலைமையைப், ‘பாத்தீங்களா மக்களே’ என்று செல்பிக்களாக எடுத்துத் தள்ளி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுக் குவித்தார். அரை நிர்வாண நிலையில் இருந்துள்ளார் அந்த நபர் அந்த சமயத்தில்