சவூதி அரேபியாவில் மேலும் நான்கு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது.

இவர்களில் மூன்று பேர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். நான்காவது நபர், போதை மருந்து கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட, சிரியா நாட்டவர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 130 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வெகுவாக அதிகரித்திருக்கிறது.

சவூதி அரேபியாவில் நீதி வழங்கும் முறையிலேயே பெரும் தவறு இருப்பதாக செவ்வாய்க் கிழமையன்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியிருந்தது. உடனடியாக மரண தண்டனைகளுக்குத் தடை விதிக்கும்படியும் தெரிவித்திருந்தது.

பெரும்பாலான மரண தண்டனைகள், பொதுமக்கள் மத்தியில் தலையை வெட்டி நிறைவேற்றப்படுகிறது.

கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதங்களுடன் வந்து கொள்ளையடித்தல், போதைப்பொருள் கடத்தல், இஸ்லாமிய மதத்திலிருந்து மாறுதல் ஆகியவற்றுக்கு சவூதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

சோமாலிலாண்ட் மனித புதைகுழியில் கிடைத்த உடல்களுக்கு அஞ்சலி

26-08-2015

150825123119_somaliland_640x360_bbc_nocreditசோமாலிலாண்ட் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் நாட்டில், ஒரு பெரிய மனிதக் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட 42 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Image caption 1988ல் வெடித்த உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர்களின் உடலாக இவை இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்நாட்டின் தலைநகர் ஹர்கெய்சாவில் தண்ணீருக்கான குழாய்களைப் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

1988ல் வெடித்த உள்நாட்டு யுத்தின்போது, ஹர்கெய்ஸா நகரின் நடந்த குண்டுவீச்சில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சோமாலியாவில் இருந்து சோமாலிலாண்ட் பிரிந்து சென்றது.

Share.
Leave A Reply