கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு மகளொருவர் , தனது தந்தையுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவமொன்று களுத்துறை- பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தந்தையால் , அவரது 15 வயது மகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.
மேலும் அவரது மகளுக்கு குழந்தையொன்றும் பிறந்துள்ளது. அக்குழந்தை தற்போது தத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயத்தை பெண்ணின் தாயும் தெரிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளமை தொடர்பில் பொலிசிற்கு முறைப்பாடு கிடைத்த போதிலும் ,அப்போது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் அவரது காதலனே என அவரது தாயார் தெரிவித்திருந்துள்ளார்.
நீண்ட காலமாக சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு தாயார் எதிர்ப்பு தெரிவிக்கவே சிறுமியும் , தந்தையும் வீட்டை விட்டு ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் தாயார் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.