புத்தளம் நகரில் பிரபல பாடசாலையொன்றின் முன்னாள் அதிபர் , அதே பாடசாலையில் கற்கும் மாணவியொரை துஷ்பிரயோகத்துகுட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயலவரொருவரே சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு இம்முறைப்பாட்டை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அம் மாணவி மருத்துவ பரிசோதனைகளின் பொருட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியொருவரே மருத்துவ பரிசோதனைகளின் பொருட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

குறித்த அதிபர் சிறுமியிடம் பல தடவை முறைகேடான விதத்தில் நடந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பிள்ளையின் தாய் புத்தளம் கல்வி வலயஅலுவலகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த அதிபர் பின் தங்கிய பிரதேச பாடசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் வீட்டுக்கு வந்துள்ள அதிபர் பெற்றோரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதனைக் கண்ட அயலவரே முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், மாணவியிடம் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைப் பெற்றுள்ளனர்.

மாணவியும் அதிபரின் காமுக செயற்பாடுகள் தொடர்பில் உண்மைகளைக் கூறியுள்ளார். தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறாக நடந்தமை தொடர்பில் அம்மாணவி தகவல் வழங்கியுள்ளார்.

தற்போது அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றனர்.

Share.
Leave A Reply