நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தாயகப் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை புலம்பெயர் தமிழர்கள் வரவேற்று ள்ளனர்.
கூட்டமைப்பின் வெற்றிக்கு பெரும்பாலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கூட்டமைப்பிற்கே தாயகத் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை நாம் இப்பகுதியில் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் சில (புலியாதரவு அமைப்புகள்) மிகத் தீவிரமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரித்து வந்தன.
மாற்றத்திற்கான குரல் எனப் பெயரிட்டு அக்கட்சிக்கே தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கூறி வந்தன.
அதனை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சில ஆதரித்தன. அந்த ஊடகங்களும் அக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் எனப் பரப்புரைகளும் மேற்கொண்டன.
இதனால் பல்வேறு விவாதங்கள் கருத்து மோதல்கள் இங்கு இடம்பெற்றன. தாயக மக்களின் நிலையை உணராமல் செய்யப்படும் பரப்புரைகளை புலம்பெயர் தமிழ் மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
அவல த்திற்கு இலக்கான மக்கள் தங்கள் பிரதி நிதிகளாக யாரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.
அதனை புலம்பெயர் தமிழர்கள் முடிவு செய்யக் கூடாது என்றும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான காரணமும் இங்கு தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
உலகத் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் போன்ற அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தாயகத் தமிழர் வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தது.
அனைத்துலக ஈழத் தமிழர் அவையும் இவ்வாறான வேண்டுகோளை விடுத்திருந்தது. இந்த வேண்டுகோள்களின் போது புலம்பெயர் தமிழர்களிடையே தேர்தல் செலவிற்கான பணமும் சேகரிக்கப்பட்டது.
தேர்தல் நடைபெறுவதற்கு முதல் நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொ டர்ச்சியாக ஆதரித்து வரும் கவிஞர் காசி ஆனந்தனும் களமிறக்கப்பட்டிருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோள் சகலபுலம் பெயர் தமிழ் ஊடகங்களிலும் வெளியாகியது இங்கு குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இவ்வாறான வேண்டுகோள்களையும் தாண்டி தாயகத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர். அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழர்களின் கட்சி என்பதையும் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
தாயகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தவறாக எடை போட்ட அமைப்புக்களுக்கு முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதே நேரத்தில் தமது விருப்பை தாயக மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற ஒருதலைப்பட்சமான முடிவிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மக்களின் விடியலுக்காக போரா டும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவர்க ளின் நிலைப்பாட்டை சரிவர புரிந்து கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
சர்வதேசத்தின் கவனம் எமது பக்கம் திரும்ப வேண்டுமாயின் இரு தரப்பும் ஒன்றாக இணைந்தே செயற்படவேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழர்களின் போராட்டம் ஒரு முக்கியமான இலக்கு நோக்கியே அமைந்துள்ளது. செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
அதில் இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப் படவுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்காக அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என புலம்பெயர் தமிழ் மக்கள் போராடி வருகின்றனர்.
அவ்வாறான கோரிக்கையை முன்வைத்து ஜெனீவா ஐ.நா. பணிமனை எதிரே செப்டெம்பர் 21 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அவர்கள் நடத்தவுள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை நாம் கடந்த வாரம் வெளியி ட்டிருந்தோம்.
ஆனால் இந்நிலையில் தேர்தல் முடிந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பதவி ஏற்றுள்ளது. தேர்தல் ஜனநாயக முறையில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்களே பாராட்டும் தெரிவித்துள்ளன.
தேசிய அரசொன்றை அமைத்து நாட்டை சமாதான வழியில் ஆட்சி செய்யப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். தேசிய அரசில் இணைந்து கொள்ளுமாறு சகல கட்சிகளையும் அவர் கேட்டுள்ளார்.
அவ்வாறான சூழ்நிலையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதில் சந்தேகமே. அதிலும் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து விட் டால் உள்ளக விசாரணை என்ற முடிவுக்கு பேரவையின் உறுப்பு நாடுகள் வரலாம்.
ஆனால் உள்ளக விசாரணையில் உலகத் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. உண்மையான குற்றவாளிகளுக்கு அங்கு தண்டனை வழங்கப்படும் என்பதை தாயக மக்களும் நம்பவில்லை.
மிகப் பெரிய இன அழிப்புக்கும் மனித உரிமை மீறல் அவலத்திற்கும் உள்ளான தமிழருக்கு முதலில் நியாயம் கிடைக்க வேண்டும்.
குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதனையே புலம்பெயர் தமிழர்கள் அழுத்தமாக கூறி வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசில் இணைவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்படுகின்றது. ஆனால் பி.பி.சி. தமிழோசை இது தொடர்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிலரின் கருத்துக்களை கேட்டிருந்தது.
தமிழரின் கொள்கையை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் இருந்தால் அரசுடன் இணைவது தவறல்ல என அதன்போது பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
தமிழரின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுவதற்கும் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுவதே சிறந்தது என்றும் சிலர் குறிப்பிட்டனர்.
இருப்பினும் இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொகுதி வாரியாக தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறி வது மிக அவசியமாகின்றது. பெரும்பான்மையான தாயக மக்கள் விரும்பும் முடிவை கூட்டமைப்பு செயற்படுத்த வேண்டும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படி இருப்பினும் தமிழர் பிரச் சினைக்கான தீர்வு விடயத்தில் சர்வதேச த்தின் கவனம் குறைவாகவே காணப்படு கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் இவ் விடயத்தில் மிக அழுத்தமாக இருப்பதன் மூலமே சர்வதேசத்தின் கவனத்தை அதிகரிக்க முடியும் என்றும் பல ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
-வி.ஆா. தவராசா-