மிகவும் எளிமையான வாழ்க்கை நட த்தி வந்த அவரின் மறைவு இளைஞர்களை வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அவரது சகோதரனொருவன் தொடர்பான தகவல்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.கலாமின் அண்ணன் தனது தம்பியின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளார்.

11760265_944221905629037_7913057011021094151_nஅப்துல் கலாமின் முகச் சாயலைக் கொண்ட அவர் பஸ்ஸில் செல்வதை கண்ட அரசியல் பிரமுகர் ஒருவர் அவரை பஸ்ஸிலிருந்து இறக்கி தனது காரில் இராமேஸ்வரத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

11760327_944221832295711_5913551643173505026_nநெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்என்பது போல குடும்ப உறுப்பினர் ஒருவர் உயர் பதவியில் இருக்கும் போது அவருக்கு அருகில் இருப்போரும் அதன்போது பயன்பெறுவது தவிர்க்கமுடியாதொன்றாகின்றது.

ஆனால் என்ன வகையில் அவை பயன் பெறுகின்றனர் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

11800019_944221875629040_5749224548083630001_nமேலும் ஒரு நாட்டில் ஒருவர் ஜனாதிபதியாகவே அல்லது உயர் பதவியொன்றில் இருக்கும்பட்சத்தில் அவரது சகோதரர்கள் , மனைவி , மகன்கள் எவ்வாறான வாழ்க்கை வாழுகின்றனர் என்பதை வைத்து அவ் ஆட்சி மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கணித்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் நோக்குமிட த்து தற்போது இந்திய அரசியலில் உள்ள மற்றைய தலைவர்களுடன் ஒப்பிடும் பட்சத்தில் அப்துல் கலாம் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டிருந்தார் எனக் கூறமுடிகின்றது.

Share.
Leave A Reply