அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற  மூன்றாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

முன்னதாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 312 ஓட்டங்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 201 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 5 விக்கெட் கைப்பற்றி  அசத்தினார்.

இதையடுத்து 111 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2வது இன்னிங்சில் 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

221417.3
இதைத் தொடர்ந்து, 386 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நான்காம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இன்று இலங்கை அணி 268 ஓட்டங்களக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.

ஒரு கட்டத்தில் மெத்தியூஸ் மற்றும் குசேல் ஜனித்பெரேரா ஆகியோரின் இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றியை இலங்கை அணி பக்கம் திருப்புவது போன்று காணப்பட்டது.

எனினும் குசேல் பெரேரா 70 ஓட்டங்களுடனும் இறுதிவரை போராடிய மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் 7 ஆவது சதத்தை கடந்து 110 ஓட்டங்களை பெற்றும் ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றி உறுதியானது.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை நழுவ விட்ட இந்திய அணி, அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் விராட் கோலி தலைமையில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனா புஜாராவும் தொடர் ஆட்டநாயகனாக அஸ்வினும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share.
Leave A Reply