அகமதாபாத்: படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்துடன் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் குஜராத்தின் ஹர்திக் படேல், இளம் பெண் ஒருவருடன் கும்மாளம்போடும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் முற்படுத்தப்பட்ட படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மையில் அகமதாபாத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தைக் நடத்திக் காட்டியவர் 22 வயது இளைஞரான ஹர்திக் படேல்.
அவர் சில மணிநேரங்கள் கைது செய்யப்பட்டதற்கே குஜராத் பற்றி எரிந்தது. 10 பேர் வரை பலியாகியும் போனார்கள்..
01-1441080838-hardik-patel-video-viral

ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஹர்திக் படேல்.. இந்திய தொலைக்காட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் யார் இந்த ஹர்திக் படேல், அவரது பின்னணி என்று இன்னமும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அலசல் ஆராய்ச்சிகளில் சிக்கியிருக்கிறது ஒரு அஜால் குஜால் வீடியோ…. ஹர்திக் படேலும் அவரது 2 நண்பர்களும் இளம் பெண் ஒவருடன் ஏடாகூடமாக கும்மாளமடிக்கும் சில நிமிடங்கள் கொண்ட வீடியோ காட்சிதான் அது..
சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த வீடியோ காட்சிகள்.. இருப்பினும் அது ஹர்திக் படேலே அல்ல என்ற குரலும் ஆங்காங்கே எழத் தொடங்கியிருக்கிறது…

Share.
Leave A Reply