சீனாவில் கைகளை இழந்த நபர் ஒருவர் தனது தாயை பொறுப்புடன் கவனித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சாங்க்காங் நகரத்திற்கு அருகில் உள்ள டோங்க்சின் கிராமத்தை சேர்ந்தவர் சென் க்சிங்யின்(48).
வீட்டில் ஆறாவது பிள்ளையாக பிறந்த இவர் தனது ஏழு வயதில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.
இரு கைகளை இழந்தபோதும் தனது அன்றாடப்பணிகளை அவரே கவனித்து வருகிறார், மேலும் தங்களது குடும்பத்தொழிலான விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்க்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதில் நெகிழ்ச்சியூட்டும் விடயமாக, மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தனது 88 வயது தாயையும் கவனித்து வருகிறார்.
அன்றாடம் உணவுகளை தயாரித்து, அதனை தனது வாயில் பற்றியிருக்கும் கரண்டியால் தாயாருக்கு உணவை ஊட்டி வருகிறார்.
இவர் இவ்வாறு தனது தாயை பராமரித்து வருவதை சீன ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
வளர்ப்பு மகன் என்ற உண்மை தெரிந்தமையால் சிறுவன் தற்கொலை
04-08-2015
வளர்ப்பு மகன் என்ற உண்மை தெரிந்தமையால் 9வயது சிறுவன் ஒருவன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் இடம்பெற்றுள் ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது- – 52). அவரது மனைவி சுமா (வயது-–35) இத் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அவர்களின் உறவினர் ஒருவரது பவன் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
சிறு வயதிலிருந்தே இவர்களிடம் வளர்வதால், பவனுக்கு தான் வளர்ப்பு மகன் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தன்னுடன் படிக்கும் மாணவர்கள் மூலம், தன்னை வளர்த்து வருவது வளர்ப்புப் பெற்றோர் என பவனுக்குத் தெரிய வந்ததால், மனவேதனை அடைந்த பவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தியுள்ளார்.
இதனையடுத்து, வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த பவனை மீட்ட அவரது வளர்ப்புப் பெற்றோர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கையில், வழியில் பவன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, அஞ்செட்டி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பார்வையிட..
https://www.facebook.com/ilakkiyainfo