ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கடத்திச் செல்­லப்­பட்டு, காணாமற்போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் இப்­போது தீவிரம் பெற்­றி­ருக்­கின்­றன.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம், ஊட­க­விய­லாளர் பிரகீத் எக்னெலிகொட காணா­மற்­போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள், பாரா­ளு­மன்றத் தேர்­தலை அண்­டிய காலத்தில் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

அது, அப்போதைய ஆட்­சி­யா­ளர்­களை மடக்­கு­கின்ற முன்­னைய ஆட்­சியின் போது, நடந்த சம்­ப­வங்­களை வாக்கா­ளர்­க­ளுக்கு நினை­வூட்­டு­வ­தற்­காக தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் அர­சியல் இலாபம் கருதி மேற்கொள்­ளப்­படும் முயற்­சி­யா­கவும் பார்க்­கப்­பட்­டது.

ஆனால், தற்­போ­தைய நிலையில், இந்த விசா­ர­ணை­களின் போக்கு, அதற்கு அப்­பாற்­பட்ட ஒரு நோக்­கத்தைக் கொண்­டுள்­ள­தா­கவே தெரி­கி­றது.

அதா­வது, இலங்­கையின் நீதிப் பொறி­மு­றையின் மீது நம்­ப­கத்­தன்­மையை உரு­வாக்­குதல், போரின் போது நடந்த மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான குற்­றச்­செ­யல்கள் தொடர்­பாக நம்­ப­க­மான உள்ளூர் விசா­ர­ணையை நடத்தும் ஆற்றல் இலங்­கைக்கு இருக்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­துதல் தான் இந்த விசா­ர­ணை­களின் முக்­கிய இலக்­காக மாறியி­ருப்­ப­தா­கவே தெரி­கி­றது.

குறிப்­பாக ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு காணா­மற்­போகச் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்று நான்கு இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஏற்­க­னவே ஓய்­வு­பெற்ற இரா­ணுவப் புல­னாய்வு அதி­காரி மற்றும் விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் கைது செய்­யப்­பட்டு நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் விடு­தலைப் புலிகள் மூலம், ராஜ­கி­ரி­ய­வுக்கு வர­வ­ழைக்­கப்­பட்ட பிரகீத் எக்­னெ­லி­கொட, கடத்­தப்­பட்டு கிரித்­தல இரா­ணுவ முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்டு, மூன்று நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்டு விசாரிக்கப்பட்டி­ருக்­கிறார் என்று விசா­ர­ணை­களில் தக­வல்கள் தெரி­ய­வந்­துள்­ளன.

அதற்குப் பின்னர், அப்­போது மேஜர் நிலையில் இருந்த கிரித்­தல இரா­ணுவ முகாமின் பொறுப்­ப­தி­காரி ஒருவர் அவரை வெளியில் கொண்டு சென்­றி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.

இதனால் தான், பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­மற்­போன, சம­யத்தில் கிரித்­தல இரா­ணுவ முகாமில் பணியாற்றிய நான்கு இரா­ணுவ அதி­கா­ரி­களும் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றனர்.

இவர்கள் தொடர்­பான தக­வல்கள், பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­னரே குற்­றப்­புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்­தி­ருந்­தது.

இவர்­களை விசா­ர­ணைக்­காக கைய­ளிக்­கு­மாறு இரா­ணுவத் தலை­மை­ய­கத்­துக்கு முறைப்­படி கோரிக்கை விடுக்கப்­பட்ட போதிலும், அதற்கு இரா­ணுவத் தலைமை செவி­சாய்க்­க­வில்லை.

அவர்­களைப் பாது­காக்க இரா­ணுவத் தலைமை முற்­ப­டு­வ­தா­கவும், சந்­தே­க­ந­பர்­களை ஒப்­ப­டைக்க மறுப்பதாகவும் செய்­திகள் வெளி­யா­கின.

பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வுகள் தற்­போ­தைய அர­சுக்குச் சாத­க­மாக அமை­யாது போனால், விசா­ர­ணைகள் திசை திரும்பும் என்ற நம்­பிக்­கையில், தேர்தல் முடியும் வரை இழுத்­த­டித்த இரா­ணுவத் தலைமை கடை­சி­யாக அவர்­களை விசா­ரிக்க அனு­ம­தித்­தது.

ஐந்து மணி­நேர விசா­ர­ணையின் பின்னர், குறித்த 4 பேரையும் கைது செய்ய குற்­றப்­புல­னாய்வுப் பிரிவு முடிவு செய்தபோது, அதற்கு, பாது­காப்புச் செய­லரும், இரா­ணுவத் தள­ப­தியும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­தா­கவும் ஊடகங்களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

அதில் லெப்.கேர்ணல் அதி­கா­ரிகள் இருவர் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில் முக்­கிய பங்காற்றியவர்கள் என்றும், அவர்­களைக் கைது செய்யக் கூடாது என்றும் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால், அவர்­களின் அழுத்­தங்­களைப் புறக்­க­ணித்தே, இந்த நால்­வரும் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றனர்.

nisha_pirakeeth(அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை சந்தித்தபோது..)

இந்தச் சூழலில்தான், கடந்த வாரம் கொழும்பு வந்­தி­ருந்த தெற்கு மத்­திய ஆசி­யா­வுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் நிஷா பிஸ்­வாலும், மனி­த­ உ­ரி­மைகள், ஜன­நா­யகம், தொழி­லாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரொம் மாலி­னோவ்ஸ்­கியும், பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவியான சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை சந்­தித்துப் பேச்சு நடத்­தினர்.

சந்­தியா எக்­னெ­லி­கொட காணா­மற்­போன தனது கண­வ­னுக்கு நீதி கோரி ஜெனீ­வாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் அமர்­வு­க­ளுக்கும் சென்­றி­ருந்­தவர்.

இப்­போது அவரை அமெ­ரிக்க உயர் அதி­கா­ரிகள் சந்தித்­தி­ருப்­பது, பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்­பான விசாரணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் விதம் குறித்து கேட்டறி­வ­தற்­காக எனக் கருத முடி­ய­வில்லை.

இம்­முறை அவர் ஜெனீ­வா­வுக்கு செல்­வதை தடுப்­பதே அவர்­களின் நோக்­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.

அல்­லது அவரை வைத்து, உள்­நாட்டு விசா­ர­ணை­களின் போக்கில் ஏற்­பட்­டுள்ள மாற்­றத்தை அல்லதுநம்பகத்தன்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கலாம்.

வடக்கு, கிழக்கில் காணா­மற்­போ­னோ­ருக்­காக நடத்­தப்­படும் போராட்­டங்­களைப் போலவே, சந்­தியா எக்னெலிகொ­டவின் போராட்­டங்­களும் சர்­வ­தேச கவ­னத்தை ஈர்த்­தவை என்­பதில் சந்­தே­க­மில்லை.

எனவே, பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­மற்­போன சம்­பவம் குறித்த விசார­ணை­களின் ஊடாக, படை­யி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­களை தற்­போ­தைய அர­சாங்கம் நம்­ப­கத்­தன்­மை­யுடன் முன்­னெ­டுக்­கி­றது என்ற கருத்தை சர்­வ­தேச ரீதியில் ஏற்­ப­டுத்தும் முயற்­சி­க­ளா­கவே இதனைக் கருத வேண்டும்.

மிரு­சுவில் படு­கொலை வழக்கில், ஒரு இரா­ணுவ அதி­கா­ரிக்கு மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டது மற்­றொரு நடவ­டிக்­கை­யாகும்.

இலங்கை மீது உள்ள பொது­வான குற்­றச்­சாட்­டு­களில் ஒன்று குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­தாகும்.

தண்­ட­னையில் இருந்து தப்­பிக்கும் பாரம்­ப­ரியம் இலங்­கையில் தொடர்­வ­தாக அமெ­ரிக்­காவின் ஒவ்­வொரு அறிக்­கை­யிலும் இடம்­பெற்­றி­ருந்­ததை அவ­தா­னித்­தி­ருக்­கலாம்.

மனித உரிமை மீறல்­க­ளுக்கு இணை­யாக இந்த தண்­ட­னையிலிருந்து தப்­பித்துக் கொள்ளல் என்ற விடயம் பார்க்­கப்­ப­டு­கி­றது.

குற்­ற­வா­ளிகள் தண்­ட­னையிலிருந்து தப்­பிப்­ப­தற்­கான வழிகள் இருப்­பதால் தான், மனித உரி­மை­க­ளுக்கு மதிப்பற்ற சூழல் ஏற்­ப­டு­வ­தாக – மனித உரிமை மீறல்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக மேற்­கு­லக நாடுகள் வலு­வாக நம்­பு­கின்­றன.

18-Biswal.இலங்கை வந்­தி­ருந்த நிஷா பிஸ்­வாலும், ரொம் மாலி­னோவ்ஸ்­கியும் தமது உரை­களின் போது, பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இலங்கை மக்கள் தண்­ட­னையிலிருந்து தப்­பித்­த­லுக்கு எதி­ரா­கவும் வாக்­க­ளித்­தி­ருந்­தனர் என்­பதைக் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

இதி­லி­ருந்தே இதன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து கொள்­ளலாம்.

ஜன­வ­ரியில் நிகழ்ந்த ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர், இலங்­கையின் நீதிப் பொறி­மு­றை­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்கா உத­வி­களை வழங்­கி­யது.

*அதற்கு முக்­கி­ய­மான காரணம், தண்­ட­னையில் இருந்து தப்­பித்துக் கொள்ளும் கலா­சா­ரத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வது தான்.

இதன் ஊடாக, தமது பிர­தான திட்டம் அல்­லது இலக்கு சுல­ப­மாக நிறை­வேறும் என்று அமெ­ரிக்கா கரு­து­கி­றது.

அதா­வது குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான எவ­ரையும், நீதியின் முன் நிறுத்தும் ஒரு வழக்­கத்தை ஏற்­ப­டுத்தி விட்டால், உள்­நாட்டு நீதிப் பொறி­மு­றை­களின் மீதான மக்­களின் நம்­ப­கத்­தன்மை அதி­க­ரிக்கும்.

அது, உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு ஆத­ர­வாக தமிழ்­மக்­க­ளையும் திருப்பி விடும் என்று நம்­பு­கி­றது அமெ­ரிக்கா.

பிரகீத் எக்­னெ­லி­கொட வழக்கின் மீதான நட­வ­டிக்­கைகள், இந்த நம்­பிக்­கையை வளர்ப்­ப­தற்­கான ஒரு நகர்வேயாகும்.

எனினும், இந்த ஒரு சம்­ப­வத்தை மட்டும் வைத்துக் கொண்டு உள்­நாட்டு நீதிப் பொறி­மு­றையின் மீது நம்பிக்கையை எற்­ப­டுத்தி விட முடி­யாது.

இந்த வழக்கில் குற்­ற­வா­ளிகள் என்று கரு­தப்­ப­டு­வோ­ருக்கு முறைப்­படி தண்­டனை பெற்றுக் கொடுக்­கப்­படும் வரையில், இதன் மீது நம்­பிக்கை உரு­வாகப் போவ­தில்லை.

ஏற்­க­னவே, வெலி­வே­ரிய – ரது­பஸ்­வெ­லவில் பொது­மக்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­திய இரா­ணுவ அதி­கா­ரிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு செய்த பரிந்துரையை தற்போதைய அரசாங்கமும் நிறைவேற்றவில்லை.

அதற்கு சம்­பந்­தப்­பட்ட படை அதி­கா­ரிகள் போரில் முக்­கிய படை­ய­ணி­களை வழி­ந­டத்­தி­ய­வர்கள் என்­பதே ஒரே கார­ண­மாக இருக்­கி­றது.

போரில் சம்­பந்­தப்­பட்ட வெற்­றியைப் பெற்­றுக்­கொ­டுத்த படை­யினர் அல்­லது அர­சி­யல்­வா­திகள் தண்­ட­னை­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­வர்கள் என்ற சிங்­கள அதி­கார வர்க்­கத்தின் சிந்­த­னையில் பெரிய மாற்­றங்கள் ஏற்­ப­ட­வில்லை.

தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் மூதூர் படு­கொலை உள்­ளிட்ட பல சம்­ப­வங்கள் குறித்து முறை­யான விசாரணை நடத்­தப்­ப­டவோ, நீதி வழங்­கப்­ப­டவோ இல்லை என்ற குறை­பாடு ஆழ­மாக இருக்­கி­றது.

இப்­ப­டி­யான நிலை­யிலும், போரில் வெற்­றியைப் பெற்றுக் கொடுத்த படை­யி­னரும், அர­சி­யல்­வா­தி­களும் தண்டனைக்கு அப்­பாற்­பட்­ட­வர்கள் என்ற சிங்­கள அதி­கா­ர­வர்க்­கத்தின் சிந்­த­னையில் மாற்றம் ஏற்­ப­டாத நிலை­யிலும், உள்நாட்டு விசாரணைக்கு சாதகமாக தமிழர்களைத் திருப்புவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்காது.

Share.
Leave A Reply