யாழ்ப்பாணம் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை இந்தச் செய்தியில் இருந்து நீங்கள் அறிவீர்கள். அண்மையில் தவறுதலான முறையில் சிறு குற்றம் ஒன்றைச் செய்து யாழ்ப்பாணச் சிறைக்குச் சென்றவர் அங்கு என்ன நடக்கின்றது என்பதை தனது நண்பனான ஊடகவியலாளருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

அவர் தெரியப்படுத்தி இருந்ததில் மிகவும் கேவலமான ஒன்றாக கருதப்படும் சம்பவம் இங்கு தரப்பட்டுள்ளது.

நீதிமன்றில் தண்டனை பெற்று சிறைக்குள் வந்தவர்களை அங்கு இருக்கும் கைதிகள் என்ன குற்றம் செய்தது என விசாரித்து அவர்களுக்கு ‘ராக்கிங்‘ முறையில் தண்டனைகள் கொடுப்பார்களாம்.

அவ்வாறு சிறைக்குள் வந்த கைதி ஒருவரை ஏனைய கைதிகள் விசாரித்த போது குறித்த கைதி எதற்காக தண்டனை பெற்றார் என்பதைத் தெரிவித்த போது கைதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது யாழ்பாணத்தில் கிறீஸ்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் தமது சடலத்தை பெட்டியுடன் புதைத்துவிடுவார்கள்.

இவ்வாறு யாராவது கிறீஸ்தவர்கள் மரணமடைவதை குறித்த கைதியுடன் சேர்ந்தவர்கள் அறிந்து கொள்வார்களாம்.

அவர்கள் பத்திரிகைகள் மற்றும் வேறு விதங்களில் இவ்வாறான கிறீஸ்தவர்களின் மரணத்தை அறிந்து மரணமடைந்தவர்கள் பணக்காரர்களா என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.

அதன் பின்னர் மரணமடைந்தவரின் வீட்டில் சென்று இறந்தவருக்கு வாங்கிய பிரேதப் பெட்டி எவ்வளவு பெறுமதியானது என்பதை அறிந்து கொள்வார்கள்.

இதன் பின்னர்தான் இவர்களின் நடவடிக்கை தொடரும். சடலம் சவச்சாலைக்குச் சென்று அடக்கம் செய்யப்பட்ட பின்னர் நள்ளிரவு வேளை அந்த மயானத்துக்குச் செல்லும் குறித்த நபர்கள் அந்தச் சடலம் புதைத்த இடத்தைத் தோண்டி வெளியே எடுத்து பிரேதப் பெட்டியையும் சடலத்தில் கிடக்கும் பெறுமதி மிக்க பொருட்கள் ஆடைகள் ஆகியவற்றையும் எடுத்துவிட்டு சடலத்தை மீண்டும் அந்தக் குழியில் போட்டு புதைத்துவிடுவார்களாம்.

இவ்வாறு எடுக்கும் பிரேதப் பெட்டிகளை வாங்குவதற்கும் சில அந்திமகாலகக் கடைகள் செயற்பட்டு வருகின்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மயானத்தில் வைத்து பெட்டியை திருடிக் கொண்டிருக்கும் போது பொலிசாரிடம் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டே நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சிறைக்குள் அடைக்கப்பட்டார்.

பிரேதத்தை தோண்டி பெட்டியைக் களவாடி விற்கும் கேவலமான நிலையிலும் யாழ்ப்பாணத்தில் ஒருசிலர் இருக்கின்றார்கள் என்பது தனக்கு சிறைக்குப் போன பின்னரே தெரிய வந்ததாக குறித்த நபர் ஊடகவியலாருக்கு கூறியுள்ளார்.

Share.
Leave A Reply