சென்னை: சரத்குமார்- ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும், வருகிற 23ம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார்-ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான். இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சென்னையில் உள்ள ராடான் டிவியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.
தற்போது இவருக்கு திருமணம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபிமன்யூ விளையாடி வருகிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வருகிற 23ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருமண தேதி குறித்து முடிவு செய்ய இருக்கிறார்கள்.