கிளிநொச்சியில் சடலம் ஒன்று இன்று (12.09.2015) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய ஒருவரினது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை கிளிநொச்சி பரந்தன் உமையாழ்புரம் ஏ9 வீதி 261 வது மையில் கல் பகுதியில் வீதியருகே பயனித்த வயோதிபர் மீது வாகனம் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்கள். விபத்துக்குள்ளான வயயோதிபர் ஸ்தலத்தில் சிதறி பலியானார்.
இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பலியானவர் யார் என்பது இன்னும் இனங்கனபடவில்லை என்று பொலிஸார் தெறிவிக்கின்றார்கள்.