பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொண்டு வரும் நிலையில், அகதிகள் போர்வையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பாவில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பா ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அகதிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
பயிற்சி பெற்ற 4 ஆயிரம் ஐ.எஸ்.தீவிரவாதிகளால் ஒரு இரவுக்குள் 50 ஆயிரம் பேர் குடியிருக்கும் ஒரு நகரத்தை அழித்து அனைவரையும் கொலை செய்துவிட முடியும் என அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ஆய்வாளர்கள்.
சமூக ஆய்வாளர்களின் அச்சத்தை உறுதி செய்யும் வகையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் இருவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஐரோப்பாவில் அகதிகளாக புகுந்திருக்கும் அந்த நபர்களில் ஒருவர் தெரிவிக்கையில், சிரியாவில் அல்காயிதா மற்றும் ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராகவும் தாம் போராடியதாக கூறியுள்ளார்,
ஆனால் உண்மை நிலை என்னவென்பது தீவிர விசாரணைக்கு பின்னரே வெளிவரும் என கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே ஐ.எஸ்.தீவிரவாதிகளால் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு என ஜேர்மனியின் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த்து குறிப்பிடத்தக்கது.