மர்லின் மன்றோ, ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த அழகிய “லைலா”. தனது கவர்ச்சியான தோற்றதினால் அன்றைய இளைஞர்களின் மனதை விழி அசைவால் விழ வைத்தவர்.

அன்றைய ஹாலிவுட்டை தனது அழகினால், உலகின் மூலைமுடுக்கில் உள்ள திரையரங்குகளுக்கெல்லாம் எடுத்து சென்றவர்.

திடீரென ஹாலிவுட்டில் உச்சாணிக் கொம்பில் எரி அமர்ந்த, இவரது மரணமும் திடீரென தான் நிகழ்ந்தது. மர்மமான முறையில் மர்லின் மன்றோ அவரது அறையில் இறந்துக் கிடந்தார்.

 உலகையே தனது அழகினாலும், கவர்ச்சியினாலும் கட்டி வைத்திருந்த மர்லின் மன்றோ பற்றி முன்பு யாரும் அறிந்திராத ரகசியங்கள் பற்றி இனிக் காண்போம்

238_large--marilyn-monroe-beauty-package-fuer-den-star-in-ihnenஅறிவுத்திறன்
ஓர் நபரின் அறிவுத்திறன் குறித்து கணக்கிடுவதை ஐ.க்யூ என்று கூருவோம். அந்த வகையில் மர்லின் மன்றோவின் ஐ.க்யூ 168 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது, பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (160) போன்றவர்களை விட அதிகமானது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Scarlett-Johanson-marilyn-monroe

இயற்பெயர்: மர்லின் மன்றோவின் இயற்பெயர் நார்மா ஜேன் மோர்டென்சன். இவர் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் சர்ஜரி: இயற்கையிலேயே அழகியாக இருந்த போதும் கூட, தனது திரையுலக வாழ்க்கைக்காக மூக்கு மற்றும் கன்னம் பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தார் மர்லின் மன்றோ.

marilyn_monroe_by_youtuneo-d3iq0br

வைரம் பிடிக்காது
மர்லின் மன்றோவிற்கு வைர நகைகள் பிடிக்காதாம். முத்து நகைகளை தான் விரும்பி அணிவாராம். ஆனால், தனது புகழுக்காக வெளியிடங்களுக்கு செல்லும் போது வைர நகைகள் அணிய வேண்டியக் கட்டாயத்தில் இருந்தார்.

Marilyn-marilyn-monroe-33568907-500-455

திக்கு வாய் : மர்லின் மன்றோவுக்கு, அவரது பருவ வயது வரை திக்கு வாய் இருந்ததாம். பின், வளர வளர அது மறைந்துவிட்டதாக அவரே கூறியிருக்கிறார். மன அழுத்தம் ஏற்படும் போது அவருக்கு திக்குமாம்.
Marilyn-Monroe-marilyn-monroe-32326783-366-500

விலை உயர்ந்த: உடை அவர் அப்போது அணிந்திருந்த உடைகள் இப்போது மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் கென்னடியின் பிறந்தநாள் விழாவில் அவர் பிறந்தநாள் பாடல் பாடும் போது உடுத்தியிருந்த உடை 1 மில்லியன் டாலருக்கு விலை போனதாம்.
ரகசிய உறவு: இவர் கடைசியாக உயிருடன் இருந்தது ஃபிராங்க் சினாட்ரா என்பவரது இடத்தில் தான்.

marilyn-monroe-seven-year-itch-white-dress-color

புரளி: மர்லின் மன்றோவை கென்னடியுடன் உறவில் இருக்கக் கூடாது என்று ஒரு மாபியா தலைவன் வற்புறுத்தியதாகவும், அதன் மறுநாளே மர்லின் மன்றோ அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

-Marilyn-Monroe-marilyn-monroe-31980490-500-597

நிர்வாண படங்கள்:  ப்ளேபாய் என்னும் நாளிதழ், இவரது நிர்வாண புகைப்படத்திற்கு வெறும் $50 பணம் தான் கொடுத்ததாம், 1949ஆம் ஆண்டு.

நன்கு சமைப்பார்: மர்லின் மன்றோவிற்கு நன்கு சமைக்க தெரியுமாம். ஆயினும், தனது உடலை பேணிக் காக்க வெறும் பாலும்,முட்டையும் தான் சாப்பிடுவார்.

583edbe3-78bf-4c83-8bb2-6299013107ef

கல்லறையில் மலர்கள்: ஒருமுறை தனது கணவர் ஜோவிடம், தான் இறந்துவிட்டால் தனது கல்லறையில் வாரம் தவறாது மலர்கள் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அந்த வார்த்தைக்காக, 20 வருடங்களாக வாரம் மூன்று முறை மர்லின் மன்றோவின் கல்லறைக்கு சென்று மலர்கள் வைத்துவிட்டு வந்தாராம் ஜோ.

தாயாக வேணுடும்:  என்ற ஏக்கம் தாயாக வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது மர்லின் மன்றோவிற்கு, ஆனால் கடைசி வரை அது நடக்கவே இல்லை. கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது.

marilyn-monroe-in-color

அகாடமி அவார்ட் வாங்கியதில்லை: ஒரு முறை கூட அகாடமி அவார்டுக்கு மர்லின் மன்றோ பரிந்துரைக்கப்படவில்லை. இவர் ஒரே ஒரு முறை கோல்டன் க்ளோப் விருது மட்டும் வாங்கியிருக்கிறார்.

நிறைய தற்கொலைகள்: மர்லின் மன்றோ இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, இவரது ரசிகர்கள் பலர் தற்கொலை செய்துக் கொண்டார்களாம். இதைப் பற்றிய செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

சுயசரிதை: மர்லின் மன்றோ தனது வாழ்க்கையைப் பற்றி “மை ஸ்டோரி” என்ற சுயசரிதை எழுதியிருந்தார். ஆனால், இந்த புத்தகம் இவர் இறந்து பத்து ஆண்டுகள் கழித்து தான் வெளிவந்ததாம்.

PIC-10

வசனம் மனப்பாடம் செய்ய வராது: மர்லின் மன்றோவிற்கு தனது படங்களின் வசனங்களை மனப்பாடம் செய்வது மிகவும் கடினமாம். ஒரு படத்தில்,” இட்ஸ் மீ, சுகர்..” (Its me, sugar..) என்னும் வசனத்தை உச்சரிக்க அறுபது டேக்குகள் எடுத்தாராம். Show Thumbnail

Share.
Leave A Reply