சுற்றுலாப்  பயணியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய , இமாச்சல பிரதேசத்தின் மலை வாசஸ்தலமான தர்மசாலாவிற்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணையே ஒரு கும்பல் வல்லுறவுகுட்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அவர் வந்துள்ளார். திங்கட்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்: “46 வயதான அந்தப் பெண் சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு சாப்பிடுவதற்காக வெளியில் சென்றுள்ளார்.

நள்ளிரவில் ஹோட்டலுக்கு வந்துகொண்டிருந்தபோது 2 நபர்கள் அவரை இழுத்துச் சென்று போதை மருந்தை கொடுத்துள்ளனர். அவர் மயங்கி விழுந்ததும் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இச்சம்பவம் இந்தியாவில் , சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

Share.
Leave A Reply