உத்தரப்பிரதேசத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் (படத்தில் வேலை வாய்ப்பு தொடர்பகத்தில் வேலைக்குப் பதிவு செய்ய முண்டியடிக்கும் மக்கள் )
அரசுப் பணியிடங்களில் கடைநிலைப் பணியான, பியூன் வேலைக்கு இந்தியாவின் உத்தரப்பிரெதேச மாநிலத்தில் நிலவும் கடும் போட்டி குறித்த செய்திகள் பிரமிக்க வைக்கின்றன.
அந்த மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? — 23 லட்சம் பேர் !
ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர் போட்டியிடுகிறார்கள் என்று கணக்காகிறது.
இந்த நிலைமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் வேலையில்லாத் திண்ட்டாட்டத்தைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது.
இதில் இன்னும் வேடிக்கையான விஷயம் (அல்லது வேதனையான விஷயம்) என்னவென்றால், விண்ணப்பித்தவர்களில் பலர் பட்டதாரிகள். சிலர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள் கூட !
விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து நேர்காணல் நடத்த வேண்டுமென்றால், அது நடந்து முடிய நான்காண்டுகள் ஆகும் என்று உத்தரப்பிரதேச அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதுவும் ஒரு நாளைக்கு 2,000 பேர்களை நேர்காணல் செய்தால் !
உத்தரப்பிரதேசத்தில் நிலமை இப்படியிருக்கு.. ஆனால் யாழ்பாணத்தில் உள்ள நிலைமை என்ன தெரியுமா?
யாழ்பாணத்தில் பியூன், கூலி வேலைக்கு நிறைய ஆட்கள் தேவையாக இருக்கிறது. ஆனால்.. எந்த இளைஞனோ அல்லது யுவதியோ இப்படியான வேலைக்கு போகமாட்டினமாம். இப்படியான வேலைகள் செய்வது கௌரவ குறைச்சலாம். (வெளிநாட்டுக்கு வந்து கழுவ தாயார்! )
ஆசிரியர்கள், மருத்துவ பணியாளர்கள், கட்டிட தொழில் சம்பந்தபட்ட வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. ஆனால் யாரும் போக மறக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை.
வீதி போடும் வேலை, அபிவிருத்தி பணிகளுக்கான வேலைகள் மற்றும் உணவு விடுதிகளில் சிங்கள இளைஞர்கள் தான் வந்து நின்று வேலை செய்கிறார்கள்.
ஆனால்… அவர்கள் சிங்களத்தில் பேசிக்கொண்டு யாழ்பாண வீதியில் திரிந்தால்.. சனம் ஒரு விசமத்தனமாக பார்க்கிறது. சிங்களவனுக்கு யாழ்பாணத்தில் என்ன வேலையிருக்கிறது எனக்கேட்கிறார்கள்.
கொழும்பிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணிக்கும் பெரிய பேரூந்துகளை இயக்குகின்ற ஓட்டினராக இருப்பவனும் சிங்களவன்தான். (நல்ல சம்பளம் ஆனால் கஸ்ரமான வேலை. கஸ்ரமான வேலை என்பதால் யாழ்பாணத்தாருக்கு விருப்பமில்லை)
யாழ்பாணத்தாருக்கு வெளிநாட்டுக்காரன் தனது சொந்தக் காசைக்கொடுத்து ஒரு புதிய பேரூந்து, ஆட்டோ அல்லது கார் எடுத்துக்கொடுத்தால் சந்தோசபடுவான். (அதையும் வேறு யாரவது ஒரு ஓட்டுனரை சம்பளத்துக்கு பிடித்துதான் ஓட்டுவான்)
ஆகக்குறைந்தது… இன்னும் 30 அல்லது 50 வருசத்துக்குதான் யாழ்பாணத்தார் வசதியாக வாழ்வார்கள். வெளிநாட்டில் உள்ள பழசுகள் அனோகமாக விரைவில் முழுப்பேரும் ஒன்றொன்றாக மண்டையை போடடிருவார்கள். நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் காசும் அனுப்பமாட்டார்கள் ஏன் தொடர்புகூட வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை யாழ்பாணத்தில் உள்ளவர்களுக்கு அறியத்தருகிறோம.
எங்கட பேரன் இருக்கிறான் பேத்தி இருக்கிறாள் காசு வாங்கலாம் என நினைத்து ரெலிபோன் போடுகின்ற வேலையை வைத்துக்கொள்ளவேண்டாம.