பாடசாலைப் பருவத்தில் காதலித்து பின்னர் கனடாவுக்குச் சென்றவுடன் தன்னை மறந்ததைக் காரணம் காட்டி, கனடாவில் இருந்து வந்த யுவதியை, அவளது திருமணத்திற்கு முதல்நாள் கடத்திய பஸ்சாரதியையும் அவனது கூட்டாளிகள் இருவரையும் கைது செய்த பொலிசார் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்தி நீதிவான் மா.கணேசராசா அவர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மூவருடன் சேர்ந்து யுவதியைக் கடத்திய மேலும் சிலரையும் யுவதியை கடத்திச் சென்று கிளிநொச்சிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்திருந்த பெண்கள் இருவரையும் கைது செய்யவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் சிலர் தலைமறைவாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது…
வடமராட்சி பகுதியில் இளம்பெண்ணொருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தோம். அது பற்றிய மேலதிக செய்திகள் வெளியாகியுள்ளன.
வடமராட்சி வல்வைபகுதிக்கு நெருக்கமான இமையாணன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப்பெண் கனடாவிலிருந்து திருமணத்திற்காக வந்திருந்தார்.
சிறுப்பிட்டியிலுள்ள வாலிபருடன் நாளை வியாழக்கிழமை திருமணம் நடக்கவிருந்த சமயத்திலேயே இந்த கடத்தல் நடந்துள்ளது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முகத்தை கறுப்புத்துணியால் மூடிக்கட்டிக்கொண்டு வந்த மர்மநபர்கள் வீட்டுக்கதவை அடித்து உடைத்துக் கொண்டு உள்நுழைந்துள்ளனர். இவர்களை கண்டு கனடா யுவதி அலறியுள்ளார்.
எனினும், துணை யுவதியின் வாய்க்குள் அடைத்து, அவரை தூக்கி வாகனத்திற்குள் ஏற்றிக் கொண்டு பறந்துள்ளனர்.
பிரதேச வாலிபர்கள் வாகனத்தை துரத்திச் சென்றபோதும், உடுப்பிட்டி பகுதியால் சென்று வரணிப்பக்கமாக தப்பிச் சென்றுவிட்டது.
இது பழைய காதல் விவகாரத்தால் நடந்தது என பிரதேசவாசிகள் பேசிக்கொள்கிறார்கள்.
யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் யுவதிகளுடன் காம லீலைகள் புரிந்த வெளிநாட்டுத் தமிழன்
இலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரே நேரத்தில் இரு யுவதிகளுடன் இரவிரவாக கும்மாளம் அடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த குடும்பஸ்தர் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரையும் கடுமையாகத் தாக்கியுள்ளாராம்.
இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிடுவதற்கு முயன்ற ஊழியரை ஹோட்டல் முகாமையாளர் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியும் உள்ளார்.
‘தனக்கு தேவையான சில உணவுப் பொருட்களைக் கொண்டுவரும்படி தெரிவித்த குடும்பஸ்தரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது அறைக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்ற வேளை ‘எதற்காக கதவைத் தட்டி என்னிடம் அனுமதி கேட்காது கதவைத் திறந்தாய்‘ எனத் தெரிவித்தே குறித்த குடும்பஸ்தர் ஊழியரைத் தாக்கியுள்ளாராம்.
அவரது அறைக்குள் இரு யுவதிகள் இருந்ததாகவும் இருவரும் அரை குறை ஆடையுடன் இருந்ததாகவும் குறித்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கை ஆரம்பிப்பது தொடர்பாக சிலரைச் சந்தித்துக் கொண்டிருந்ததாகவும் குறித்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
அந்த இரு யுவதிகளும் எப்போது அவரது அறைக்குள் வந்தார்கள் என்பது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்த ஊழியர் தான் தாக்கப்பட்டது தொடர்பாகவும் இரு இளம்பெண்கள் அவரது அறைக்குள் தங்கியிருப்பது தொடர்பாகவும் நான் ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்து பொலிசாரிட் முறையிடப் போவதாகச் சொன்ன போது அவர் தன்னைக் கடுமையாக எச்சரித்ததாகவும் ஊழியர் தெரிவித்தார்.