தற்போது இந்த சாதனையை #pulimostlikedindiantrailer என்ற ஹெஷ்டேக் போட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
விஜயின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான “புலி” படத்தின் டிரெய்லரை யூடியூபில் இதுவரை 6,188,535 பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். மேலும் புலி டிரெய்லர் வெளியான உடன் மிகக்குறைந்த தினங்களில் மிகவும் அதிகமான பேர் பார்த்து ரசித்த ஒரு டிரெய்லராகவும் மாறியது.
ஏற்கனவே புலி டிரெய்லர் சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் படத்தின் வரலாற்றை முறியடித்திருந்தது. பஜ்ரங்கி பைஜானை விடவும் அதிகமான லைக்குகள் மற்றும் பார்வைகளை புலி டிரெய்லர் பெற்றிருக்கிறது.
தற்போது ‘புலி’ படத்தின் டிரைலர் அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சல்மான்கானின் பட வரலாற்றை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் நடிகர் விஜய்.
தங்கள் மனங்கவர்ந்த நடிகரின் டிரெய்லர் பாலிவுட் முன்னணி நடிகரின் வரலாற்றை முறியடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே #pulimostlikedindiantrailer என்ற ஹெஷ்டேக்கை போட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
அக்டோபர் 1 ம் தேதி புலி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இந்தியா முழுவதும் சுமார் 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் புலியை வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. இன்னும் 10 தினங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது அடுத்தடுத்த கொண்டாட்டங்களுக்கு விஜய் ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். புலி டிரெய்லர் – சாதனை மேல் சாதனை…