கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த கர்ப்பிணிப் பெண், தொண்டமானாறு கடல் நீரேரியில் ஞாயிற்றுக்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

3ஆம் சந்தி தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த, அரசன் சந்திரவதனா (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (18) குறித்த கர்ப்பிணிப் பெண் காணாமல் போன நிலையில், அவருடைய உறவினர்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

காணாமல் போனவர் 5 மாத கர்ப்பிணி என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (20) காலை செல்வசந்நிதி ஆலயத்துக்கு வந்த அடியவர்கள், பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கி இருப்பதை அவதானித்து, தகவல் வழங்கியதையடுத்தே, சடலம் மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறை கடற்பகுதியில் காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு
 
 body_jaffna_00

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் மாலை நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்த நிலையில் காணாமல்போன இளைஞர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை அல்வாய் மாலுசந்தியை சேர்ந்த கு.துவாரகன் என்ற இளைஞன் நண்பர்களுடன் பருத்தித்துறை கடற்பகுதியில் குளிக்கச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தான்.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் கடற்றொழிலுக்காக சென்றிருந்தவர்களால் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply