மாத்தளை பிரதேச பௌத்த விகாரையொன்றில் வெள்ளரசுக் கன்று ஒன்று சுயமாக முளைத்துள்ள அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அவருக்கு நிழல் அளித்த காரணத்தால் வெள்ளரசு மரத்துக்கு பௌத்தர்கள் மத்தியில் பெரும் மரியாதை இருக்கின்றது.
அதன் ஞாபகார்த்தமாக அநுராதபுரத்தில் நடப்பட்டுள்ள வெள்ளரசு மரத்திற்கு தலதா மாளிகைக்கு அடுத்த கௌரவம் பௌத்தர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் அநுராதபுரம் தவிர்ந்த ஏனைய இடங்களில் வெள்ளரச மரங்கள் வளருவதில்லை. வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் மாத்தளை நாவுல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வெள்ளரசு மரக் கன்று ஒன்று சுயமாக முளைத்துள்ளது.
தற்போதைக்கு குறித்த வெள்ளரசு மரக்கன்று சுமார் 18 அங்குலம் அளவில் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளரசு மரக்கன்று முளைத்துள்ள அதிசயத்தைக் கேள்விப்பட்டு பௌத்த பொதுமக்கள் ஏராளமாக குறித்த விகாரைக்கு வருகை தரத் தொடங்கியுள்ளதாக விகாராதிபதி கோங்கஹவெல சுமண தேரர் தெரிவித்துள்ளார்.