பெங்களூர்: 38 வயது பெண்மணியுடன் உல்லாசமாக இருந்து அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த ஹிந்தி நடிகர் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மைசூர் சாலை பகுதியை சேர்ந்தவர் 38 வயது பெண்மணி. திருமணமாகி மகள் உள்ள நிலையில், கிளப், டான்ஸ் என்று தோழிகளோடு ஜாலியாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
அப்படித்தான் ஒருநாள் டான்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானார் 23 வயதான ஹிந்தி டிவி சீரியல் நடிகர் சவுரப் சாய் சர்தாஜ். இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்தவர்.24-1443075624-sourabh-600

நெருக்கமான நட்பு
இந்த பழக்கம் செல்போனில் சாட் செய்யும் அளவுக்கு சென்றது. ஒருநாள் அந்த பெண்ணின் வீட்டுக்கே சவுரப் சென்றுள்ளார். அப்போது சவுரப்பை தனது கணவரிடமும் அந்த பெண் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
எனவே, சவுரப் பெங்களூர் வரும்போதெல்லாம், ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக அந்த பெண்ணின் கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளார்.
திரை நட்சத்திரம் என்பதால், அந்த பெண்ணுக்கு சவுரப் மீது ஒரு கிரேஸ் ஏற்பட்டுள்ளது.
24-1443075673-sourabh-1-2-600

உல்லாசம்
கடந்த ஜனவரி மாதம், பெண் வீட்டுக்கு சவுரப் வந்தபோது, வீட்டில் கணவர் இல்லை. அப்போது, சவுரப் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இதை சவுரப் ரகசியமாக படம் பிடித்து வைத்துக்கொண்டுள்ளார். இதன்பிறகு சவுரப் பெங்களூர் வரும்போதெல்லாம், பல்வேறு ஹோட்டல்களில் ரூம் எடுத்து அங்கு இந்த பெண்ணை வரவைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
24-1443075716-sourabh-3-600

கணவருக்கு சந்தேகம்
ஒருநாள் இருவரும் ஹோட்டலில் நெருக்கமாக இருந்தபோது, அந்த பெண்ணின் கணவர் அவசரமாக போன் செய்துள்ளார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. நாள் முழுவதும் ஹோட்டலில் இருவரும் கும்மாளமிட்டுக்கொண்டிருந்ததால், கணவரிடமிருந்து வந்த போனை அப்பெண் கவனிக்கவில்லை.
பயந்து போன கணவர், மனைவியை யாராவது கடத்தியிருக்கலாம் என்று நினைத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்வதாக செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.24-1443075770-sourabh-1221-600

மிரட்டல்
இதன்பிறகு அவசரமாக வீடு திரும்பிய அந்த பெண், தோழிகள் சிலருடன் ரெசார்ட்டில் பொழுதுபோக்கியதாகவும் அதனால் போனை கவனிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். சந்தேகமடைந்த கணவர், தனது மனைவியை அவரின் தாய்வீடு அமைந்துள்ள உடுப்பியில் சென்றுவிட்டுவிட்டு வந்துவிட்டாராம். ஆனால் சவுரப் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு போன் செய்து உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். வரமறுத்தால் வீடியோவை கணவரிடம் காண்பித்துவிட்டு, இணையத்திலும் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
24-1443075820-sourabhs-sa121sd-600
நகையை விற்று பணம்
மேலும், பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் தனது நகைகளை விற்று சவுரப்புக்கு அந்த பெண் பணம் கொடுத்துள்ளார். சுமார் ரூ.15 லட்சம் இவ்வாறு கைமாறியுள்ளது. இதன்பிறகு, பணம் தர முடியவில்லை என்று அந்த பெண் கூறியபோது, அவரின் மகளை கொலை செய்துவிடுவேன் என்று சவுரப் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு முடிவுக்கு வந்த அந்த பெண் காவல் நிலையத்தில் சவுரப்புக்கு எதிராக புகார் அளித்தார்.
24-1443075848-sourabh-600

போலீசில் புகார்
அந்த புகாரில், ஜனவரி மாதம் தனது வீட்டுக்கு சவுரப் வந்தபோது, அவருக்கு ஜூஸ் கொடுத்ததாகவும், அதில் மயக்க மாத்திரையை கலந்து என்னையும் குடிக்க வைத்துவிட்டார். எனவே நான் மயக்கமானேன். அப்போது என்னை பலாத்காரம் செய்துவிட்டார். பிறகு அதை வீடியோவாக எடுத்து வைத்து தொடர்ந்து என்னை பலாத்காரம் செய்து வந்தார். பணமும் பறித்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-1443075872-sourabh-1-2-600
சிசிடிவியில் சிக்கினார்
போலீசார், அந்த பெண்மணி கூறிய ஹோட்டல்கள், மற்றும் நகை விற்பனை கடைகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண்மணியும், சவுரப்பும் சேர்ந்தே இரு இடங்களுக்கும் சென்ற ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து மும்பை விரைந்த பெங்களூர் போலீசார் சவுரப்பை கைது செய்துள்ளனர். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
Share.
Leave A Reply