சுவிட்சர்லாந்து நாட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Neuchatel மண்டலத்தில் உள்ள பவுட்ரி என்ற நகரில் 71 வயதான கணவன் மற்றும் 52 வயதான மனைவி வசித்து வந்துள்ளனர்.
இந்த தம்பதிகளுக்கு 18 மற்றும் 26 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
கணவனை விட மனைவி 19 வயது இளையவர் என்பதால், கணவனுடன் அவருக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய மனைவி வேறொரு நபருடன் கள்ளத்தனமாக பழகி வருவதாக கணவனுக்கு ஏற்கனவே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு மனைவி வெளியே சென்றுள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் மனைவிக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, மனைவி ஒரு வீட்டிற்குள் நுழைவதை பார்த்த கணவன் தூரத்திலேயே சிறிது நேரம் நின்று கண்கானித்துள்ளார்.
பின்னர், வீட்டின் பின்பக்கமாக சென்ற அவர், பாதியாக திறந்திருந்த சமையல் அறை சன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் தன்னுடைய மனைவியும், தனக்கு ஏற்கனவே பழக்கமான ஒரு நபருடன் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மனைவி தனக்கு துரோகம் செய்ததை தாங்க முடியாமல் ஆத்திரம் அடைந்த அவர், அவர்களை நோக்கி கத்தியுள்ளார்.
தன்னுடைய ரகசியம் அம்பலமாகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் சன்னல் அருகே வந்த மனைவியின் மார்பை நோக்கி கணவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மனைவி அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். நடந்ததை கண்ட கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி விடுகிறார்.
மனைவியை கொன்ற கணவன் இரவு 1 மணியளவில் பொலிசாருக்கு தகவல் அளித்து தனது துப்பாக்கியை கொடுத்துவிட்டு தானும் சரணடைந்துள்ளார்.
கணவரின் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.