சென்னை: பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ், இன்று(ஞாயிறு) காலை வெளியிட்டுள்ள  ஆடியோவில்,உயர் அதிகாரிகளின் நெருக்கடிகளே விஷ்ணு பிரியா தற்கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் 51 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.

அதில், விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும்,  கோகுல்ராஜ் வழக்கில் ஏராளமானோரை போலீசார் அடித்து விசாரித்துள்ளனர் என்றும்,  கைது செய்யப் பட்டவர்கள் முன்பே டி எஸ் பி விஷ்ணு பிரியாவை உயர் அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசியுள்ளனர் என்றும்,விஷ்ணு பிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரிகளே காரணம் என்றும் கூறியுள்ளார்.

அதனை முழுமையாக கீழே உள்ள இணைப்பில் கேட்கலாம்.

விஷ்ணுபிரியா விவகாரம்: ஆதாரம் வெளியிடப்போவதாக யுவராஜ் பரபரப்பு ஆடியோ வெளியீடு!

sritharan

தருமபுரி: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை நாளை (27ஆம் தேதி) வெளியிடுவேன் என கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் பேசுவதாக  ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்யப்படவில்லை, கொலை செய்யப்பட்டார் எனவும், அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளே காரணம் எனவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், உயர் அதிகாரிகள் வற்புறுத்தலால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது பெயரில் வெளியாகியுள்ள ஆடியோவில், ”வற்புறுத்தித்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொள்ள வைக்கப்பட்டார் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்னிடத்தில் உள்ளது.

நாளை (27ஆம் தேதி) காலை 11மணிக்கு அந்த ஆதாரத்தினை ஊடகங்களுக்கு நான் அனுப்பி வைக்க உள்ளேன். அந்த ஆதாரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கையினை முதல்வர் எடுப்பார் என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply