கோயிலில் பூசை செய்து கொண்டு, தமிழனின் தலையில வீபூதியை  பூசி விட்டு நாலு காசு சம்பாதிக்கிற வேலையை செய்வதைவிட்டு, விட்டு  சந்திரிக்கா அம்மையாரை  கொல்வதற்காக  குண்டு வைப்பதற்காக புலிகளுக்கு உதவி செய்த பூசாரிக்கு  300வருட சிறை  தண்டனை கிடைத்திருக்கிறது.

ஐயர் ரகுபதி சர்மாவின் மனைவியான வசந்தி ரகுபதி சர்மா இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார்.

கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

190 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதன் வரதராஜா மற்றும் சந்திரா ஐயர் ரகுபதி சர்மா ஆகியோரே இந்த வழக்கில் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவின் மனைவியான வசந்தி ரகுபதி சர்மா இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதம் வரதராஜாவுக்கு 290 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

150930110207_chandrika_ragupathy_sarma__512x288_bbc_nocreditகுற்றவாளிகளில் ஒருவரான ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகள் சிறை

Share.
Leave A Reply