பாணந்துறை நகரில் தனியார் வங்கியொன்றுக்குள் நுளைந்த இளைஞனொருவன் அங்கிருந்த ஊழியர் ஒருவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளைடித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பிடிபட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

Untitled-copy
குறித்த இளைஞன் பணத்தை வைப்பிலிடுவதை போன்று ரசிதொன்றை எழுதி அந்த ரசிதில் “என்னிடம் துப்பாக்கியுள்ளது. இருக்கும் பணத்தை கொடு இல்லையேல் சுட்டுவிடுவேன் , எச்சரிக்கை ஒலி பட்டனை அழுத்தினால் சுடுவேன் ” என எழுதி அங்கிருந்த பணம் கொடுக்கல் வாங்கல் பிரிவில் கொடுத்து 5 இலட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஓடும் போது அந்த பகுதியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் அவரை பிடித்துள்ளார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரிடம் துப்பாக்கி எதுவும் கிடையாது என்பது தெரிய வந்துள்ளது.

காரணத்தை வெளிப்படுத்திய சந்தேகநபர்

கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரை 7 நாள் தடுத்து வைத்து  விசாரணை செய்ய காவற்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கைதானவர் ரஷ்யாவின் மொஸ்கவ் பல்கலைகழத்தில் கல்வி பயின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வியை தொடர்வதற்கான நிதி இல்லாததன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் நாடு திரும்பியதாக பாணந்துறை – தெற்கு காவற்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பணம் இல்லாததன் காரணமாக வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்துக்குரியவரின் வாக்கு மூலத்தில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply