சென்னை: சென்னை பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தா வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட திரைதுறையை சேர்ந்த பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணி முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் உள்ள நடிகை சமந்தா வீட்டில் அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை குறித்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் சென்றனர்.
அப்போது, வீட்டில் இருந்த சமந்தா உறவினர்கள், பத்திரிகையாளர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நயன்தாராவும், சமந்தாவும் 3 ஆண்டுகளாக வருமானவரியை தாக்கல் செய்யவில்லை என்பதே சோதனைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.