வாரணாசி: கோயில் திருவிழா பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள் இரண்டு பேர், நடனம் ஆடிய பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் சேர்ந்து ஆடிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அரங்கேறியுள்ளது.

வாரணாசியில் கோயில் திருவிழாவின்போது ஆடல் பாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு பாதுகாப்பிற்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் சேர்ந்து ஆடினார்.

அதைப் பார்த்து குஷியான மற்றொரு காவலரும் போட்டி போட்டு கொண்டு, நடனப் பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்தார்.

காவல்துறையினர் அடித்த கூத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply