வடக்கின் பாரம்பரிய நிகழ்வான மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று சனிக்கிழமை மாலை மன்னார் கருக்காக்குளம் மைதானத்தில் இடம் பெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை,மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாட்டுவண்டிச் சவாரிச் சங்கமும் இணைந்து குறித்த மாட்டு வண்டி சவாரி போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா, வடகடகு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உற்பட திணைக்களத்தின் தலைவர்கள் பலர்; கலந்து கொண்டனர்.

-குறித்த பாரம்பரிய மாட்டுவண்டி சவாரிப்போட்டியில் வடமாகாணத்தில் இருந்து 70 மாட்டுவண்டி போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர்)

unnamed3unnamed-110unnamed-215unnamed-314unnamed-44unnamed-53IMG_4174

Share.
Leave A Reply