சேயாவை கொலை செய்தது தானே என’ கொண்டயா’ என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்தவின் சகோதரர் ஒத்துக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது

இதேவேளை கொண்டயாவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொண்டயாவின் சகோதரர் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் இக்கொலையை தானே புரிந்ததாக கொண்டயா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். எனினும் தற்போது கொண்டயாவின் சகோதரர் புரிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இக்கொலை தொடர்பில் கொண்டயா வெவ்வேறான சந்தர்ப்பங்களில் முரண்பாடான தகவல்களை வழங்கிவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் இக்கொலையை தானே புரிந்ததாகவும் , பின்னர் சகோதரனுக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ள கொண்டயா பின்னர் இக்கொலையுடன் தான் சம்பந்தப்படவில்லையெனவும் உண்மையான கொலைக்காரர் சகோதரனே எனவும் தெரிவித்திருந்துள்ளார்.

கொண்டயாவின் சகோதரர் ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவரின் தகவலின் அடிப்படையில் கொண்டயா கைதுசெய்யப்பட்ட தன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கொண்டயான எனும் துனேஷ் பிரியசாந்த இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரின் சகோதரர் குற்றவிசாரணை பிரிவினரால் மினுவாங்கொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயலத் இன்று முதல் தடவையான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

இந்த நிலையில், தாம் நீதிவான் முன்னிலையில், குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதனையடுத்து தமது உத்தியோகபூர்வ காரியாலயத்திற்கு அவரை அனுப்புமாறு நீதிவான் ரகசிய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், சமன் ஜயலத் தொடர்பில் மரபணுப் பரிசோதனை மேற்கொள்ள அவசியப்பாடு உள்ளதாக ரகசிய காவல்துறையினர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

Share.
Leave A Reply