கடந்த சில நாட்களுக்கு முன் காலிமுகத்திடல் கடல்பகுதியில் காணப்பட்ட முதலை இன்று நடத்தப்பட்ட
தேடல் வேட்டையில் சிக்கியுள்ளது.
கடற்படை , பொலிஸ், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து நட த்திய தேடல் நடவடிக்கையின் போதே முதலை பிடிபட்டுள்ளது. முதலைக்கு 7 வயதிருக்குமென கணிக்கப்பட்டுள்ளதுடன் இதன் நீளம் 8 அடியாகும்.